தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 31 maart 2013

TNA கிளிநொச்சி மாவட்ட அலுவலக தாக்குதலில்! பலர் படுகாயமடைந்தனர்


தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இரு பத்திரிகையாளர்கள் உட்பட காயமடைந்த 15 பேரில் சிலரது பெயர் விபரங்கள் வெளியாகியிருக்கின்றது.
குறித்த சம்பவத்தில் கரைச்சி பிரதேச சபையின் தலைவர் நா.வை.குகராசா, உபதலைவர் வ. நகுலேஷ்வரன் மற்றும் எஸ்.ஓஸ்மன், எஸ்.தயாபரன், எஸ்.பொன்னம்பலநாதன், எஸ்.கனகலிங்கம், எஸ்.மேரிஜோசப், எஸ்.ஜீவநாயகம் (காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்) எஸ்.சுகந்தன், எஸ்.உமாமகேஷ்வரி, கு.சர்வானந்தன் (அக்கராயன் பிரதேச அமைப்பாளர்) மற்றும் பத்திரிகையாளர்களான சு.பாஸ்கரன், சி.சிவேந்திரன் ஆகியோர் இத்தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளனர்.
இலங்கையின் தேசிய கொடிகளுடன், முகங்களை மூடிக் கொண்டு வந்த சிலர், கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலடியில் உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் காரியாலயத்தின் மீது நடத்திய தாக்குதலின் போதே இவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
tna_office_005tna_office_006







அலுவலக தாக்குதலுக்கும் எமக்கும் தொடர்பில்லை உண்மை கூறும் இராணுவம்?


தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி காரியாலயம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று இராணுவம் தெரிவித்துள்ளது.
இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த தாக்குதலை, இராணுவத்தினரே மேற்கொண்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில் எமது செய்திப்பிரிவு இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரியவை தொடர்பு கொண்டு வினயபோது, இந்த குற்றச்சாட்டை அவர் நிராகரித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொது மக்களே இந்த தாக்கதலை மேற்கொண்டதாக, அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் நிலைமையை காவற்துறையினர் பின்னர் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவததாக தெரிவித்த அவர், எனினும் இதற்கும் இராணுவத்தினருக்கும் சம்பந்தமில்லை என்றும் குறிப்பிட்டார்.
கிளிநொச்சியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் காரியாலயம் மீது இன்று தாக்குதல் ஒன்ற மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 13 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதும், காவற்துறையினர் அதனை உறுதிப்படுத்தவில்லை.
சுமார் 50 பேர் கொண்ட குழு ஒன்றே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக காவற்துறை ஊடகப்பிரிவில் தெரிவிக்கப்பட்டது.
இன்று முற்பகல் இடம்பெற்ற குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் எமக்கு தகவல் வழங்கினார்.

Geen opmerkingen:

Een reactie posten