ஆனால் அவை அனைத்தையும் பொஸ்வானா நாடு உதாசீனம் செய்துள்ளது. காரணம் பொஸ்வானா நாட்டோடு உலகத் தமிழர் பேரவை(GTF) மேற்கொண்ட ராஜதந்திர நடவடிக்கை ஆகும் என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் GTF மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொஸ்வானா சென்றுள்ளார்கள். அவர்கள் அன் நாட்டு வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்து உரையாடியுள்ளார்கள். அன் நாட்டின் வெளிவிவகார அமைச்சராக இருப்பவர் ஒரு காலத்தில் அன் நாட்டின் பிரதம நீதியரசராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். இலங்கையில் தற்போது கட்டாயமாக பதவி பறிக்கப்பட்ட பிரதம நீதியரசர் ஷிராணி தொடர்பாக அவர் பெரும் அதிருப்திகொண்டுள்ளார். இதன் காரணமாக அவருக்கு இலங்கை அரசு மேல் நம்பிக்கை இல்லை என்று அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார். இலங்கை அரசு தமது நாட்டிற்க்கு வரும்படி கூறியதனைக் கூட தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
இதனை GTF சரியான முறையில் அறுவடை செய்துள்ளது. ஏற்கனவே அவர் இலங்கை அரசு மீது கொண்டுள்ள அதிருப்தியை சரிவரப் பயன்படுத்தியும் மற்றும் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பாகவும் இவரோடு கலந்துரையாடப்பட்டது. இதனையடுத்து தமிழர்களோடு நல்லுறவைக் கட்டியெழுப்ப தாம் துணை நிற்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இந்தியா, நோர்வே போன்ற நாடுகள் தமிழர்களின் காலை அடிக்கடி வாரிவிடுவதாகச் சொல்லப்படும் இவ்வேளையில், தென்னாபிரிக்க நாடான பொஸ்வானா தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறுமா ? என்ற கேள்விகளும் தற்போது எழுந்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten