ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் தங்கள் நாட்டுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்ததைத் தொடர்ந்து, இலங்கையில் அமெரிக்கப் பொருட்களைப் புறக்கணிக்க சிங்கள அமைப்புகள் இலங்கை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.
நேற்று கொழும்பு கோட்டை ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய சிங்கள அமைப்புகள், அமெரிக்கத் தயாரிப்புகளான கொகககோலா, பெப்சி மற்றும் அமெரிக்க கோதுமை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் தொடர்ந்து புறக்கணிக்க வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்ட முழக்கங்களை எழுப்பினார்கள்.
சிங்கள அமைப்புகள் அமெரிக்கத் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், மனித உரிமை அமைப்புகளும் இந்தத் தீர்மானத்துக்கு பலத்த வரவேற்பு தெரிவித்துள்ளன.
Geen opmerkingen:
Een reactie posten