தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 maart 2013

தமிழ்நாட்டுச் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு நன்றி தெரிவிப்பு


தமிழக சட்டசபைப் பேரவையில் மாண்புமிகு முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களும் சட்டசபை உறப்பினர்களும் ஒருமனதாக இலங்கைத் தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடாத்ததப்பட வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளமை ஈழத்தமிழர்களிடையே வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானமாகவும் ஈழத்திற்கான திருப்புமுனையாகவும் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டுச் சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கனடியத் தமிழர் தேசிய அவை வரவேற்றுக்கொள்வதோடு நெஞ்சம் நிறைந்த பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.
2012 இல் இந்தியாவில் முப்பத்தாறுக்கும் மேற்பட்ட முன்னணிக் கட்சிகளினுடன் கனடியத் தமிழர் தேசிய அவை இணைந்து மேற்கொண்ட ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் மக்களால் இதே தீர்மானம் வலியுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மார்ச் 1ம் 2ம் 3ம் திகதிகளில் கனடியத் தமிழர் தேசிய அவை அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவைகளுடன் இணைந்து, நடத்திய தமிழர் உரிமை மாநாட்டில் பதினெட்டு நாடுகளில் இருந்து கலந்து கொண்ட பன்னாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள், மானில முதல்வர், அனைத்துலக பிரதிநிதிகள்,; மனிதவுரிமை ஆர்வலர்கள், மனித நேயச் செயற்பாட்டாளர்கள்;, தமிழ்த்; தேசியவாதிகள் சிங்கள முற்போக்கு சக்திகள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஜெனீவாவில் இதே தீர்மானத்தை நிறைவேற்றினர்.
இத்தாலியில் பலமோர் (Palermo) நகரசபையில் மேஜர்.லேலுகா ஒலான்டோ (Maj.Lay lu ka Orlando) அவர்களால் ஜெனீவா தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டது. இன்று தமிழகச் சட்டமன்றம் ஜெனீவாத் தீர்மானத்திற்கு ஒப்பான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. எம் தாயக உறவுகளுக்கும் புலம்பெயர்ந்து உலகப்பரப்பெங்கும் வாழ்ந்துவரும் ஈழத் தமிழருக்கும் இத்தீர்மானம் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் தமிழக முதல்வருக்கும் தமிழகச் சட்டசபை உறுப்பினர்களுக்கும் தாய்த் தமிழக உறவுகளுக்கும் தமிழக மாணவர்களுக்கும் கனடியத் தமிழர் தேசிய அவை கனடியத் தமிழ் மக்கள் சார்பில் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.
தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை
தொலைபேசி: 416.830.7703
மின்னஞ்சல்: info@ncctcanada.ca

Geen opmerkingen:

Een reactie posten