தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 26 maart 2013

கொழும்பு பொதுநலவாய மாநாட்டில் பிரிட்டன் மகாராணி பங்கேற்க மாட்டார்! சண்டே கார்டியன்


இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் மாநாட்டை, பிரித்தானியா மகாராணி இரண்டாவது எலிசபெத் பிரித்தானிய மகாராணி பங்கேற்கமாட்டார் என இந்திய வாரஇதழான ‘சண்டே கார்டியன்‘ தகவல் வெளியிட்டுள்ளது.
வரும் நவம்பர் மாதம் 15 ம் நாள் தொடக்கம் 17ம் நாள் வரை இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில், பிரித்தானிய மகாராணி பங்கேற்கமாட்டார் என்பது பெரும்பாலும் உறுதியாகி விட்டதாக லண்டனில் உள்ள பொதுநலவாய அமைப்பின்  செயலகத்தின் பெயர் வெளியிடாத மூத்த அதிகாரியை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பல நாடுகளின் அரச தலைவர்களும் கொழும்பு மாநாட்டில் இருந்து ஒதுங்கி கொள்ள வாய்ப்புள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பொதுநலவாய  மாநாட்டை புறக்கணிப்பதோ அல்லது அதனை இடமாற்றம் செய்வதோ நியாயமற்றது என்று உறுப்பு நாடுகளை இலங்கை அமைதிப்படுத்தும் முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவில்லை என்றும் பொதுநலவாய அமைப்பின்  செயலக மூத்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை. கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டை, மொரிசியசுக்கு மாற்றும் முயற்சிகள் நடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவின் ஸ்டீபன் ஹாப்பர் அரசாங்கம், கொமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்பதில்லை என்று உறுதியான முடிவை எடுத்து விட்டதாகவும் ‘சண்டே கார்டியன்‘ குறிப்பிட்டுள்ளது.
‘வெள்ளைக்கார பொதுநலவாய‘ நாடுகளான பிரித்தானியா, நியூசிலாந்து, அவுஸ்ரேலியா போன்றனவும், கொழும்புக்கு தமது தலைவர்களை அனுப்புவதை தவிர்க்கலாம்.
பதிலாக, அவர்கள் தமது பிரதித் தலைவர்களை அல்லது வெளிவிவகார அமைச்சர்களையோ மூத்த அதிகாரிகளையோ அனுப்பி வைக்கலாம்.
அவ்வாறு நடந்தால், பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டின் முக்கியத்துவம் குறைந்து போய் விடும்.
கொழும்பில் நடக்கும் பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டிடைப் புறக்கணிக்குமாறு கரிபியன் நாடுகளுக்கு கனடா அழுத்தங்களைக் கொடுத்து வருகிறது.

அதேவேளை,கொழும்பு பொதுநலவாய உச்சி மாநாட்டில் பிரித்தானிய மகாராணி பங்கேற்காவிட்டால் அது இலங்கை ஜனாதிபதிக்கு முக்கியமான பின்னடைவாக அமையும்.
ஏனென்றால் உலகெங்கும் நடந்த பொதுநலவாய மாநாடுகளில், பிரித்தானிய மகாராணி  பங்கேற்று கௌரவப்படுத்தியிருந்தார்.
அண்மையில் பிரித்தானிய மகாராணி வெளியிட்ட அறிக்கையில், பொதுநலவாய நாடுகள் நல்லாட்சி, மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல், கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்தல், சட்டத்தின் ஆட்சி போன்றவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://news.lankasri.com/show-RUmryDRaNZks4.html

Geen opmerkingen:

Een reactie posten