தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 24 maart 2013

இறுதிப் போரின் களமுனைப் படங்களை வழங்கியவர் இலங்கை தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவராம்!


விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இறுதிப்போரின் போது எடுக்கப்பட்ட களமுனைப் படங்களை வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு வழங்கியவரைத் தாம் கண்டறிந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவர், 2009ம் ஆண்டு மே மாதம் போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போது, தொலைக்காட்சி ஒன்றின் சார்பில் முன்னரங்கப் பகுதியில் பணியாற்றியிருந்தார்.

இவர் இலங்கையில் இருந்து வெளியேறி, தற்போது தனது குடும்பத்துடன் மேற்குநாடு ஒன்றில் வசித்து வருவதாகவும், இவரது கடந்த கால நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில்,  நேற்று முன்தினம் குருநாகலில் இடம்பெற்ற இராணுவ நிகழ்வு ஒன்றில் உரையாற்றியருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஊடகவியலாளர் ஒருவர் டொலர்களுக்கு விலை போயுள்ளதாக குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten