தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 25 maart 2013

மீனவர்களை விடுவிக்க கோரி 10வது நாளாக தொடரும் இராமேஸ்வர மீனவர்களின் வேலைநிறுத்த போராட்டம்


இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்த போராட்டம் 10வது நாளாக இன்றும் நீடிக்கிறது.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 19 மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்பது மீனவர்களின் கோரிக்கை. இதனை வலியுறுத்தி கடந்த 22ம் திகதி இராமேஸ்வரம் தபால் நிலையத்தை மீனவர்கள் முற்றுகையிட்டனர்.
மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 (கடந்த 22ம் திகதி) முன்னதாக அந்த வழியாக வந்த தமிழக கைத்தறி துறை அமைச்சர் சுந்தரராஜனை மீனவர்கள் முற்றுகையிட்டனர்.
அப்போது மீனவர்களை விடுவிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற உறுதி அளித்ததால், அமைச்சரை மீனவர்கள் விடுவித்தனர்.
கடந்த 13ம் திகதி கடலுக்கு சென்ற மீனவர்களை கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை, திடீர் தாக்குதல் நடத்தி 53 பேரை படகுகளுடன் சிறைபிடித்துச் சென்றனர்.
இவர்களில் சிறைபிடிக்கப்பட்ட 19 பேர் மட்டும் தலைமன்னார் நீதிமன்றத்தில் நீதிபதி அந்தோனி பிள்ளை சூட்சன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு அனுராதாபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், மீனவர்கள் சிறைபிடித்துச் செல்லப்பட்ட சம்பத்தை கண்டித்தும், மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்த போராட்டம் 10வது நாளக இன்றும் நீடிக்கிறது.
இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்களில் 34 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் 19 பேரை விடுவிக்க கோரி இராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
2ம் இணைப்பு
ரயில் மறியல்: நாகபட்டினத்தில் மீனவர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் கைது
நாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் சுமார் 3 ஆயிரத்திற்கு மேற்பட்டோர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டு வருவதை மத்திய அரசு தடுக்க வலியுறுத்தியும், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருப்பதைக் கண்டித்தும் இந்த  ரயில் மறியல் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டு  வருகின்றனர்.
சுற்றிலும் உள்ள மீனவ கிராமங்களில் இருந்து இன்று காலையில் குவிந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட  மீனவர்கள் ரயில் நிலையத்தில் குவிந்து எர்ணாகுளம் விரைவு ரயிலை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைத் தடுத்த பொலிஸார் அவர்களைக் கைது செய்துள்ளனர்.
இந்தப் போராட்டம் தொடர்ந்து சீர்காழியிலும் நடைபெற்று வருகிறது.

Geen opmerkingen:

Een reactie posten