தமிழ் நாட்டில் உள்ள சட்டமன்றத்தில் இதுவரை ஆயிரக்கணக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு பற்பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம். ஆனால் அதனை மத்திய அரசு ஏற்றுகொள்ளவேண்டுமே. மத்திய அரசின் கொள்கையில் மாற்றம் எதுவும் இல்லை என்றால், தமிழ் நாட்டில் போடப்படும் தீர்மானங்கள் செல்லாக் காசாகிவிடும். இதுதான் யதார்த்தம். இன்று ஜெயலலிதா அவர்கள் கொண்டுவந்த தீர்மானம் என்பது மிகவும் ஒரு நல்ல விடையம். ஆனால் இதனை நம்பி மாணவர்கள் போராட்டத்தை கைவிடும்படி தூண்டுவது ..... அரசனை நம்பி புருஷனைக் கைவிடுவதுபோல ஆகிவிடும். வரும் செப்டெம்பர் மாதம் கூட ஜெனீவா மனித உரிமைக் கவுன்சிலில் மாநாடு நடைபெறவுள்ளது. அதுவரையாவது இந்திய மத்திய அரசுக்கு தமிழக மாணவர்கள் தம்மாலான அழுத்தத்தை கொடுக்கலாமே ! ஆனால் ஏன் அவர்களை அவசர அவசரமாக போராட்டத்தை கைவிடும்படி இவர்கள் ஊக்குவிக்கிறார்கள் ?
அமெரிக்க அரசு முதன் முதலாகக் கொண்டுவந்த தீர்மானத்தில் சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்ற வரிகள் இருந்தது. பின்னர் இந்திய மத்திய அரசின் வேண்டுதலுக்கு அமைவாகவே அமெரிக்கா அச் சொற்பதங்களை நீக்கியது. அப்படி என்றால் நாம் தற்போது இந்திய மத்திய அரசை தான் சமாதானப்படுத்தி, ஈழத் தமிழர்களுக்கு சார்பாகத் திருப்பவேண்டும். ஆனால் சில அறிவிலிகள் தூண்டுதலால் , அமெரிக்க தீர்மானம் எரிக்கப்பட்டது. அதாவது உதவிசெய்ய வந்தவனை குட்டையில் தள்ளிவிட்ட கதையாக இது மாறியுள்ளது. எவர் எவர் அமெரிக்க தீர்மானத்தை எரித்தார்களோ அவர்களே இந்தியா தான் இத் தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்தது என்று அறம்பாடுகிறார்கள். ஆனால் அவர்கள் எவரும் இந்தியாவை பார்த்து எதனையும் கேட்க்கவில்லை. இந்திய தூதரங்கள் முன் போராட்டத்தை நடத்தவில்லை. ஆனால் மாறாக அமெரிக்காவைச் சாடுகிறார்கள். இல்லை எவர்கள் சுய புத்தியோடு தான் செயற்படுகிறார்களா என்று கூட தெரியவில்லை !
இன் நிலையில் மாணவர்களின் போராட்டத்தை இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் காட்டி, முடக்கும் நடவடிக்கையும் அதிவேகத்தில் நடக்க ஆரம்பித்துள்ளது. தமிழக மாணவர்களின் கிளர்ச்சி நெருப்பை தண்ணீர் ஊற்றி அப்படியே அணைக்கும் முயற்சிக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கலாகாது. அவர்கள் போராட்டத்தை தொடர்வதா இல்லை முடிப்பதா என்பதனை அவர்களே தீர்மானிக்கவேண்டும். பிற சக்திகள் இதில் ஊடுருவக் கூடாது. மாணவர்கள் தொடர்ந்து போராடினால், மத்திய அரசை ஒரு சிறிதளவேனும் ஈழத் தமிழர் சார்பாக இழுக்க முடியும். இல்லை என்றால் கூட அவர்கள் கொள்கையில் மாற்றத்தை உண்டு பண்ண அது உந்து சக்தியாக அமையும். தமிழ் நாட்டில் மாணவர்கள் தொடர்ந்து போராடினால், அது தனித் தமிழ் நாடு ஒன்று உருவாக வித்திடலாம் எனவே மாணவர்களின் கோரிக்கையை சற்று ஏற்றுக்கொள்வோம் என்று மத்திய அரசு ஏன் நினைக்காது ? இது அடியேன் கருத்து !
அதிர்வுக்காக:
வல்லிபுரத்தான்
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4767
Geen opmerkingen:
Een reactie posten