போரில் காணாமல் போன, கடத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக காணாமல் போனோர் பற்றி தேடிப்பார்க்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
2008ம் ஆண்டு முதல் இதுவரையில் 5000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்த அமைப்பின் செயலாளர் எஸ்.மகேந்திரம் தெரிவித்துள்ளார்.
எஞ்சியுள்ள 2000 முறைப்பாடுகள் குறித்தும் ஐக்கிய நாடுகள் அமைப்பில் முறைப்பாடு செய்யப்படும்.
போர் இடம்பெற்ற மற்றும் அதன் பின்னரான காலப்பகுதியில் சுமார் 10000 பேர் காணாமல் போயிருக்கலாம் எனவும் இவர்களில் 98 வீதமானவர்கள் தமிழர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உதாசீனமான போக்கைப் பின்பற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten