நாட்டுக்கு எதிராக குற்றச் சாட்டுகளை முன்வைப்பவர்களுக்கு சாதகமான சூழலை நாங்களே உருவாக்கி கொடுக்க கூடாது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக இனத்தையும் மதத்தையும் முன்னிறுத்தி இலங்கையில் இடம்பெறுகின்ற வன்முறைகள் தொடர்பில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இன மற்றும் மத அடிப்படை வாதங்களை அனுமதிக்க முடியாது. அனைத்து இனங்கள் மற்றும் மதங்களின் உரிமைகளும் இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten