இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் கடந்த சில வாரங்களாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவரும் தமிழகக் கல்லூரி மாணவர்கள் தங்கள் போராட்டம் தொடரும் என்று அறிவத்துள்ளனர்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணைய அமர்வின்போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் எங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தபோது, கடந்த மார்ச் 15 அன்று கல்லூரிகள் மூடப்பட்டன.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவபொம்மை எரிப்பு, இலங்கைத் துணைத் தூதரகம் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களின் அருகே ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல்கள் எனப் பல்வேறு வகைகளில் மாணவர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தனி ஈழம் தொடர்பாக பொதுவாக்கெடுப்பு, போர்க்குற்றங்கள் தொடர்பில் பன்னாட்டு விசாரணை உள்ளிட்ட அம்சங்களை வலியுறுத்தி தீர்மானம் ஒன்றை புதன்கிழமை தமிழக சட்டமன்றம் நிறைவேற்றியது.
முதல்வர் ஜெயலலிதா தனது அரசின் நடவடிக்கை மாணவர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையிலேயே இருப்பதால் மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதுகுறித்து கருத்து தெரிவித்த ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் முதல்வரின் கரிசனைக்கு நன்றி தெரிவித்தாலும் மத்திய அரசை எதிர்த்து தாங்கள் நடத்திவரும் போராட்டம் தொடரும் என்று கூறினார்.
தமது கல்வி நடவடிக்கைகள் பாதிக்காத வகையில் போராட்டங்கள் நடத்தப்படும் என பிரபாகரன் தெரிவித்தார்.
மீண்டும் கல்லூரிகள் திறப்பது குறித்து விரைவில் ஆணை வெளியிடப்படுமென அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் சில இடங்களில் கல்லூரிகள் ஏற்கனவே இயங்கத் துவங்கிவிட்டதாக செய்திகள் கூறுகின்றன.

Geen opmerkingen:
Een reactie posten