தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 maart 2013

இலங்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்!- இந்தியாவின் நிலைப்பாட்டை கோருகிறது ஜே.வி.பி


தமிழகத்தில் இலங்கைக்கு எதிராக இடம்பெறுகின்ற ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தியாவுக்கு செல்லும் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பிலும் இலங்கை அரசாங்கம் தெளிவான விளக்கத்தை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இந்தியா செல்கின்றவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது இந்திய மத்திய அரசாங்கத்தின் பொறுப்பு. அது தமிழக முதல்வரின் பொறுப்பு என்று கூற முடியாது.
தொடர்சியாக தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதுடன், இலங்கையர்களுக்கு எதிரான தாக்குதல்களும் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் இந்த விடயத்தில் இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? என்பது தெளிவுப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்படுவதை நானும் எதிர்த்தேன்!- கருணாநிதி
[ வியாழக்கிழமை, 28 மார்ச் 2013, 01:52.51 AM GMT ]
கச்சதீவின் அதிகாரம் இலங்கைக்கு வழங்கப்பட்ட போது தாமும் அதனை எதிர்த்ததாக திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் கருணாநிதி தீர்க்கமாக செயற்பட வில்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் குற்றம் சுமத்தி இருந்தார்.
இதற்கு பதில் வழங்கும் வகையிலேயே கருணாநிதி இதனைத் தெரிவித்துள்ளார்.
1975ம் ஆண்டு தாம் இந்த விடயத்தில் எதிர்ப்பை வெளிப்படுத்திய போதும், மத்திய அரசாங்கம் அதனை பொறுட்படுத்தவில்லை என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கச்சதீவு விடயத்தில் ஜெயலலிலதாவை போலவே தாமும் எதிர்ப்பை வெளிக்காட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் மத்திய அரசாங்கம் இதனை பொறுப்படுத்தாது அவசரமாக இந்த தீர்மானத்தை அறிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten