[ புதன்கிழமை, 27 மார்ச் 2013, 12:15.18 AM GMT ]
இலங்கையில் ஏற்பட்டுள்ள இவ்வாறான மேற்கத்தைய எதிர்ப்பு நிலை காரணமாக அங்கு பயணம் செய்யும் தனது நாட்டுப் பிரஜைகள் கவனமாகச் செயற்பட வேண்டுமெனவும் அது கேட்டுள்ளது.
இலங்கையிலுள்ள பிரித்தானிய துதுவராலயம் உட்பட ஏனைய வெளிநாட்டு தூதரங்களுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் அதிகரித்துக் காணப்படுவதாகவும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில் மேலும் தெரிவித்துள்ளது
இலங்கைக்கு விஜயம் செய்யும் பிரஜைகள் ஆபத்துகளை எதிர்நோக்கிய சந்தர்ப்பங்கள் குறைவாகக் காணப்பட்டாலும், வேறு பல சம்பவங்கள் மூலம் அவர்கள் பாதிப்புகளை எதிர்நோக்குகின்றனர்.
அத்துடன் இலங்கையில் தொடர்ந்தும் பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளை அரசாங்கம் தோற்கடித்திருந்தாலும் அரச பயங்கரவாதம் மேலோங்கிக் காணப்படுகிறது.
தடுத்து வைத்தல், கைது போன்றன இடம்பெறுகின்றன.
இராணுவக் கெடுபிடிகள், சோதனைச் சாவடிகளும் இலங்கையில் தாராளமாகவே காணப்படுகின்றன.
ஆயுதக் குழுக்களினால் மேற்கொள்ளப்படும் கடத்தல்கள் தொடர்வதாகவும் பிரித்தானியா அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.net/show-RUmryDRbNZkv0.html
அமெரிக்காவின் அச்சுறுத்தலை அலட்டிக்கொள்ள தேவையில்லை: டி.யு.குணசேகர
[ செவ்வாய்க்கிழமை, 26 மார்ச் 2013, 10:45.08 PM GMT ]
இலங்கை தொடர்பில் விசாரிக்க சர்வதேச பொறிமுறை அமைத்தால் ஜனாதிபதி மேலும் பலம் அடைவார். எனவே அத்தகைய காரியத்தில் அமெரிக்கா இறங்காது எனவும் தெரிவித்தார்.
மேலும், நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை முழுமையாகச் செயற்படுத்த வேண்டும் எனவும் இது தொடர்பில் அரசாங்கத்திற்கு தங்களுடைய யோசனையை முன்வைக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை தொடர்பில் மத்திய, தெற்காசியாவுக்கான அமெரிக்க பிரதி ராஜாங்க அமைச்சர் ரொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஜெனீவா பிரேரணையிலுள்ள விடயங்களை இலங்கை செயற்படுத்தாவிட்டால் சர்வதேச பொறிமுறையொன்றை ஏற்படுத்த நேரிடுமென அவர் குறிப்பிட்டுள்ளது குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் எமது பிரச்சினைகளுக்கு நாமே தீர்வுகாண வேண்டும். அதற்கு சர்வதேச தலையீடு தேவையில்லை.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்பட்டிருந்தால் இவ்வாறான சர்வதேச அழுத்தங்கள் ஏற்படாது. எனவே, இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஜெனீவாவில் நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபார்சுகளை செயற்படுத்துமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட தேவையில்லை. நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபார்சுள் முழுமையாக செயற்படுத்தப்பட வேண்டும். அதற்கான பொறிமுறைகளை முன்னெடுக்க வேண்டும். இலங்கையை பயமுறுத்தவே அமெரிக்கா ஜெனீவாவில் பிரேரணை கொண்டுவந்தது.
அதில் கடுமையான தொனியை குறைத்தது. இலங்கை தொடர்பில் சர்வதேச பொறிமுறை கொண்டு வருவதாகக் கூறுவதெல்லாம் வெறும் பூச்சாண்டி மட்டுமே. அது குறித்து அலட்டத் தேவையில்லை. அவ்வாறு செய்வதன் மூலம் ஜனாதிபதி மேலும் பலமடைந்து எதிர்க்கட்சி மேலும் பலவீனமடையும். அத்தகைய விடயத்தை அமெரிக்கா செய்யாது. தற்பொழுதுள்ள அரசியலமைப்பின் அடிப்படையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை செயற்படுத்த முடியும் 13 ஆவது திருத்தத்தையும் செயற்படுத்த முடியும் என்றார்.
http://www.tamilwin.net/show-RUmryDRaNZkvz.html
ஐ.நா செயலாளர் நாயகத்தின் இனஅழிப்பைத் தடுப்பதற்கான கையெழுத்து வேட்டை! - நா.க.த.அரசு
[ செவ்வாய்க்கிழமை, 26 மார்ச் 2013, 09:03.02 PM GMT ]
'இன அடிப்படையிலான பாரிய மனித உரிமை மீறல்களும், அனைத்துலக சட்ட விதிகளுக்கு மாறான குற்றங்களும் இடம்பெறுமிடத்து அவை பற்றிய தகவல்களைச் சேகரித்து, அத்தகைய குற்றங்கள் இன அழிப்பாக மாறாது தடுப்பதற்காக செயலாளர் நாயகத்தின் ஊடாக ஐநாவின் பாதுகாப்புச் சபையின் கவனத்துக்கு ஒரு முன்னெச்சரிக்கை போலக் கொண்டு வரவேண்டிய பொறுப்பு உள்ளது' எனும் ஐ.நா. விதிகளை சுட்டிக்காட்டி இந்த கையெழுத்து வேட்டையினை நா.தமிழீழ அரசாங்கத்தின் இனஒழிப்பு, போர்க்குற்றங்கள் குற்றவிசாரணைக்கும் தடுப்புக்குமான விவகார அமைச்சு முன்னெடுக்கின்றது.
எதிர்வரும் யூலை 31ம் நாள் வரை இடம்பெறவுள்ள இக்கையெழுத்து வேட்டையில் நேரடியாக ஒப்பமிட்டுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
எதிர்வரும் யூலை 31ம் நாள் வரை இடம்பெறவுள்ள இக்கையெழுத்து வேட்டையில் நேரடியாக ஒப்பமிட்டுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
நீங்களும் கையெழுத்து இட இங்கே அழுத்தவும்.....
அவர்களை நோக்கிய கோரிக்கையின் விபரம்:
மாண்புமிகு அதியாமா தியாங் அவர்கள்,
இன அழிப்பைத் தடுப்பதற்கான செயலாளர் நாயகத்தின் சிறப்பு ஆலோசகர்
866, ஐக்கிய நாடுகள் நிறுவன பணிமனை
நியுயோர்க் நகர், 10017 ஐக்கிய அமெரிக்கா
இன அழிப்பைத் தடுப்பதற்கான செயலாளர் நாயகத்தின் சிறப்பு ஆலோசகர்
866, ஐக்கிய நாடுகள் நிறுவன பணிமனை
நியுயோர்க் நகர், 10017 ஐக்கிய அமெரிக்கா
மதிப்புக்குரிய தியாங் அவர்களுக்கு வணக்கம்,
இலங்கைத்தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனஅழிப்பு, மற்றும் பாரிய குற்றங்கள் தொடர்பாகத் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கைகளையும் அவை பற்றிய ஆய்வுகளையும் உடனடியாகப் பகிரங்கப் படுத்துமாறு தங்களைப் பணிவுடன் வேண்டுகின்றோம்.
சிறிலங்கா நாட்டுக்கான ஐநாவின் நிபுணர் குழுவின் கணிப்பின்படி அங்கு நடந்தேறிய இறுதி யுத்தத்தின் போது 40 000 தமிழ் பொது மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். அதேவேளை ஐநா உள்ளக மீளாய்வுக் குழுவின் மதிப்பீட்டின்படி 70 000 பொது மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். மன்னார் மாவட்ட கத்தோலிக்க ஆண்டகை மதிப்புக்குரிய கலாநிதி இராயப்பு ஜோசேப்பு அவர்கள் கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிண க்கத்துக்குமான ஆணைக்குழு முன் வழங்கிய தனது தகவல்களின் படி இறுதி யுத்தத்தின்போது 146 679 எண்ணிக்கையிலான தமிழ் மக்களின் கதி என்னவாயிற்று எனத் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
ஓரளவு முற்று முழுதாக சிங்கள இனத்தவர்களை மட்டும் கொண்டுள்ள அரசினாலும் அதன் முகவர்களினாலும் (பாதுகாப்புப் படை போன்றவை) தமிழர்களின் சமூக, அரசியல், பொருளாதார, மத உரிமைகள் தொடர்ந்தும் இன அடிப்படையிலான தாக்குதல்கட்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன. யுத்தம் முடிவடைந்து ஏறத்தாழ நான்கு வருடங்களாகிய நிலையிலும் தமிழ்த் தேசத்தை அழிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன. பாரம்பரிய தமிழர் பிரதேசங்களில் தமிழ் மக்களின் இனப் பரம்பலை மாற்றும் நடவடிக்கைகள், அரசியல் உரிமைகளை அடக்கி ஒடுக்குதல், இராணுவமயமாக்கல், இராணுவ ஆதிக்கம் என்பனவே இன்று தமிழர் பிரதேசங்களில் நிலவும் யதார்த்த நிலைமையாகும்.
தமிழ் இனத்தை அழித்தொழிக்க இனவாத சிங்கள் அரசினால் மேற்கொள்ளப்படும் இத்தகைய இனவாத நடவடிக்கைகளை எமது மக்கள் நீண்ட காலமாக எதிர்கொண்டு வருகின்றோம். இத்தகைய குற்றச் செயல்கள் இன்று எவ்வாறு பாரதூரமாகி விட்டன என்பதையும், இவ்வகை ஆபத்தினுள் வாழும் எமது மக்களின் மன உறுதியையும் தாக்குப்பிடிக்கும் வலிமையையும் நாம் சாட்சியாகவே கண்டு அவற்றினை உலகத்தவர்க்கு எடுத்துக் காட்டியும் வருகிறோம். ஆனாலும் இவற்றின் பாதிப்பினை உலகம் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. அதனாற்றான் சிறீலங்கா அரசானது தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதல்களை 'பயங்கரவாதத்துக்கு எதிரான போர்' எனக் காட்டித் தப்பித்துக் கொள்ள முனைகின்றது. இதே போன்றுதான் சிரிய நாட்டு அரசாங்கமும் தனக்கு எதிரானவர்களைப் பயங்கரவாதிகள் எனப் பெயரிட்டுத் தப்பித்துக் கொள்கிறது.
தமிழ்த் தேசத்தின் பாதுகாப்பின் பெயரால் தங்கள் கையிலுள்ள அனைத்து தகவல்களையும் உடனடியாக வெளியிடுமாறு மரியாதையுடன் கோருகின்றோம். தமிழ் மக்களின் பாதுகாப்பு விடயத்தில் 'அமைதியான இ,ராஜதந்திரம்'; வெற்றியளிக்கவில்லை என்பதை ஐநாவின் உள்ளக மீளாய்வு அறிக்கை மூலம் அறியக்கூடியதாக உள்ளது. ஒரு இலட்சம் மக்களின் இறப்புகளின் பின்னணியில் பகிரங்கமான இராஜதந்திரம் ஒன்று மட்டுமே ஏற்றதென நாம் திடமாக நம்புகின்றோம்.
தங்கள் வசம் உள்ள அனைத்துத் தகவல்களையும் எதுவித தாமதமுமின்றி வெளியிடுமாறு இத்தால் தங்களை நாம் வலியுறுத்துகின்றோம். இவ்வாறு செய்வது தங்களின் பணிக்கென வழங்கப்படுள்ள அதிகாரங்களுக்கு உட்பட்டதாக அமையும் எனவும் குறிப்பிட விரும்புகின்றோம். இதன் தொடர்பிலான ஐநாவின் விதியினையும் இங்கு தருகின்றோம். 'இன அடிப்படையிலான பாரிய மனித உரிமை மீறல்களும், அனைத்துலக சட்ட விதிகளுக்கு மாறான குற்றங்களும் இடம்பெறுமிடத்து அவை பற்றிய தகவல்களைச் சேகரித்து, அத்தகைய குற்றங்கள் இன அழிப்பாக மாறாது தடுப்பதற்காக செயலாளர் நாயகத்தின் ஊடாக ஐநாவின் பாதுகாப்புச் சபையின் கவனத்துக்கு ஒரு முன்னெச்சரிக்கை போலக் கொண்டு வரவேண்டிய பொறுப்பு உள்ளது'
தங்கள் வசம் உள்ள அனைத்துத் தகவல்களையும் எதுவித தாமதமுமின்றி வெளியிடுமாறு இத்தால் தங்களை நாம் வலியுறுத்துகின்றோம். இவ்வாறு செய்வது தங்களின் பணிக்கென வழங்கப்படுள்ள அதிகாரங்களுக்கு உட்பட்டதாக அமையும் எனவும் குறிப்பிட விரும்புகின்றோம். இதன் தொடர்பிலான ஐநாவின் விதியினையும் இங்கு தருகின்றோம். 'இன அடிப்படையிலான பாரிய மனித உரிமை மீறல்களும், அனைத்துலக சட்ட விதிகளுக்கு மாறான குற்றங்களும் இடம்பெறுமிடத்து அவை பற்றிய தகவல்களைச் சேகரித்து, அத்தகைய குற்றங்கள் இன அழிப்பாக மாறாது தடுப்பதற்காக செயலாளர் நாயகத்தின் ஊடாக ஐநாவின் பாதுகாப்புச் சபையின் கவனத்துக்கு ஒரு முன்னெச்சரிக்கை போலக் கொண்டு வரவேண்டிய பொறுப்பு உள்ளது'
அனைத்து மக்களின் நல்வாழ்வுக்காக தாங்கள் மேற்கொள்ளும் பணிகள் சிறப்புற நிறைவேற வாழ்த்துகின்றோம். நன்றி.
இவ்வாறு கையெழுத்து வேட்டையின் கோரிக்கை விபரம் அமைந்துள்ளது.
http://www.tamilwin.net/show-RUmryDRaNZkvy.html
Geen opmerkingen:
Een reactie posten