தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 maart 2013

காங்கிரஸ் குண்டர்களால் தாக்கப்பட்ட மாணவர்களை நேரில் பார்வையிட்ட நெடுமாறன், வைகோ!


திருச்சியில் காங்கிரஸ் உள்ளாட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் அரிஸ்டோ ரவுண்டானா அருகில் உள்ள எல்.கே.எஸ். மகாலில் நடந்தது.
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ், வடக்கு மாவட்ட தலைவர், ராஜசேகரன் மற்றும் கரூர் பெரம்பலூர் மாவட்ட தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் எம்.பி யும் கலந்து கொண்டார் .
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி அரச சட்டக் கல்லூரி மாணவர்கள் கறுப்புப்கொடி ஏந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் தலைமையில் கூடியிருந்த காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் திரண்டு மாணவர்கள் மீது உருட்டு கட்டைகள் கூரிய ஆயுதங்கள் போன்றவற்றால் கடுமையாக தாக்கினார்கள்.
இதனால் பலத்த காயம் அடைந்த மாணவர்கள் அரச பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
இம் மாணவர்களை பார்வையிட்ட பழ .நெடுமாறன் மற்றும் வைகோ,
மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கிய காங்கிரஸ்கட்சியினரை வன்மையாக கண்டிப்பதோடு உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் காவல் துறையினரைக் கேட்டுக் கொண்டனர்.
vaiko-nedumaran-jvp1

Geen opmerkingen:

Een reactie posten