‘உதவிக்கான பிரார்த்தனை‘ என்ற அட்டைப்படத் தலைப்பில் இன்று வெளியாகியுள்ள இந்தியா ருடே இதழின் ஆசிரியர் தலையங்கத்தில்,
“போர் முடிவுக்கு வந்த பின்னர், சிறிலங்கா அதிபர் ராஜபக்ச வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதாகவும், பாகுபாடுகளுக்கு முடிவு கட்டுவதாகவும் வாக்குறுதி அளித்திருந்தார்.
நான்கு ஆண்டுகளாகியும் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் உள்ளன.
இந்தியா ருடேயின் அட்டைப்படச் செய்திக்காக பிரதி ஆசிரியர் சந்தீப் உன்னித்தன், பிரதி ஒளிப்பட ஆசிரியர் ரூபன் சிங் ஆகியோர் புலிகளின் கோட்டைகளாக இருந்த யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி பகுதிகளுக்கு சென்று உண்மையான கள நிலவரம் குறித்து ஆய்வு செய்தனர்.
சிறிலங்கா அரசாங்கம் கூறுவது போன்று உட்கட்டமைப்பு மீளமைப்பு வசதிகளை செய்துள்ளது என்பது பொய்யல்ல என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
தமிழர்களின் அச்சத்தை போக்கி பாதுகாப்பையும் சமஉரிமையையும் உத்தரவாதப்படுத்த இன்னும் செய்ய வேண்டியுள்ளது.
தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகள் மிக உயர்ந்தளவுக்கு இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளன.
“ஊடகவியலாளர்களுடன் தமிழர்கள் எச்சரிக்கையாகவே பேசுகிறார்கள், பதிலடி கிடைக்கலாம் என்று அவர்க்ள அனைவரும் அச்சத்தில் உள்ளனர்” என்கிறார் உன்னித்தன்.
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போருக்குப் பின்னர், ராஜபக்ச அரசாங்கத்தின் அணுகுமுறை பற்றி இந்தக் குற்றசாட்டும் உள்ளது.
தமிழர்களை பிரதான நீராட்டத்தில் இணைத்துக் கொள்ளவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், அனைத்துலக சமூகம் சிறிலங்கா அரசாங்கத்தை ஏற்க வைக்க வேண்டும்.
இது சிறிலங்காவின் நன்மைக்காகவே.முற்றுகையிட்ட நிலையில் இருக்கும் ஒரு சமூகம் இன்னொரு ஆயுதப் போராட்டம் தோன்றுவதற்கான பொருத்தமான களமான இருக்கும்” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten