இலங்கை இனப்பிரச்சினையில் நீங்களோ உங்கள் ரசிகர்களோ ஏன் பங்கெடுக்கவில்லை? பிரபாகரனின் மகன் பிஸ்கட் சாப்பிட்டுக்கொண்டு இருப்பது போல் வந்த புகைப்படத்தை பார்த்த பிறகும் நீங்கள் இந்த உணர்வில் பங்கெடுக்க தமிழனாகத்தான் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. உணர்வுப்பூர்வமாகவே பங்கெடுக்கிறோம்.
பெருமைக்குரிய மாணவர்கள்
கேள்வி:மாணவர்கள் இந்த பிரச்சினையில் போராடுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்:மாணவர்கள் என்றால் அவர்கள் பஸ்சின் கூரை மீது ஏறி டான்ஸ் ஆடுவார்கள். ஹாஸ்டலில் சண்டை போடுவார்கள் என்று இப்படியாகத்தான் இதுவரை செய்திகள் வந்திருக்கின்றன. முதன்முதலாக இலங்கை இனப்படுகொலையை கண்டித்து போராடுவதை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. அவர்களின் இந்த போராட்டம் அரசியல்வாதிகளை மூச்சுத்திணறி ஓட வைத்திருக்கிறது.என்னுடைய மகன், என் தம்பி எனக்காக பேசுகிறான். அவர்களை (மாணவர்களை) தடுக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. அவர்கள் இப்போது தந்தைக்கு உபதேசம் செய்யும் பிள்ளைகளாகி இருக்கிறார்கள். யாருமே வரவில்லை என்ற நிலையில் நாங்கள் (நடிகர்கள்) வந்திருக்க வேண்டும். மாணவர்கள் சரியான நேரத்தில் வந்து விட்டார்கள். நாங்கள் பின்வரிசையில் நிற்கிறோம்.
சர்வதேச விசாரணை
கேள்வி:இலங்கை இனப்போராட்டத்தில் அமெரிக்கா கையாண்ட சர்வதேச விசாரணை சரிதானா?
பதில்:அமெரிக்காவின் எல்லா தீர்மானமும் நியாயமாக இருக்க வாய்ப்பில்லை. எல்லா பிரச்சினையிலும் அவர்கள் சாதகமாக பேசுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
கேள்வி:அமெரிக்க தீர்மானம் தொடர்பான பிரச்சினையில் இந்திய அரசு அரசியல் செய்திருப்பதாக கருதுகிறீர்களா?
பதில்:என்னை ஏன் அரசியலில் இழுக்கிறீர்கள்?
கேள்வி:இலங்கை பிரச்சினைக்காக நடக்கும் தீக்குளிப்புகள் பற்றி உங்கள் கருத்து?
பதில்:ராமாயணத்தில் சீதை தீக்குளித்ததையே தவறு என்ற கோணத்தில் பார்க்கிறேன். எந்த பிரச்சினையிலும் தீக்குளிப்பை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது.
சஞ்சய்தத்
கேள்வி: பிரபல இந்திப்பட நடிகர் சஞ்சய்தத்துக்கு கோர்ட் விதித்த தண்டனை பற்றி?
பதில்: இது அதற்கான அரங்கம் அல்ல.இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
http://news.lankasri.com/show-RUmryDRYNZlv6.html
Geen opmerkingen:
Een reactie posten