தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 27 maart 2013

முள்ளிவாய்க்காலில் புலிகளை வெளியேறவிடாமல் தடுத்த கப்பல் !




2006ம் ஆண்டு இயந்திரக் கோளாறு காரணமாக யோர்டான் நாட்டுக் கப்பல் ஒன்று முல்லைத்தீவு கடல் பக்கம் கரை ஒதுங்கியது. அதில் உள்ள மாலுமிகளை பத்திரமாக மீட்டு பின்னர் , அவர்கள் தமது நாடு செல்ல அனுமதித்தார்கள் புலிகள். இரும்பினால் ஆக இக் கப்பல் இறுதி யுத்தத்தின் போது புலிகளுக்கு பெரும் தலைவலியாக மாறியது. காரணம் என்னவெனில் 2009ம் ஆண்டு மே மாதம் அளவில் கரை தட்டிய இக் கப்பலுக்குள் இராணுவத்தின் குறிசூட்டு(ஸ்னைப்பர்) சிப்பாய்கள் நுளைந்துவிட்டார்கள். அவர்கள் அக் கப்பலுக்குள் இருந்தவாறே பொதுமக்கள் மீதும் புலிகள் மீதும் தாக்குதல் தொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் கடல் மார்க்கமாக தப்பிச் செல்ல இருந்த சில புலிகளின் முக்கிய தளபதிகள் காயமடைந்தார்கள். 

தற்போது குறிப்பிட்ட இக் கப்பலை தாம் அகற்றவுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். சுற்றுலாப் பயணிகள் பலர் வருவதால் இக் கப்பல் பெரும் இடைஞ்சலாக இருப்பதாக அவர்கள் ஒரு நொண்டிச் சாட்டையும் கூடவே சொல்லி இருக்கிறார்கள். சரி அப்புறப்படுத்துவது என்றால் என்ன ? அக் கப்பலை வெட்டி வெட்டி துண்டாக்கி பின்னர் அதனை என்ன செய்யப் போகிறார்கள் ? அது இரும்பு அல்லவா ? விற்றால் கோடி ரூபா தேறும். ஆனால் ரெம்ப பாலிஷ் வார்த்தையை பாவித்து தாம் அப்புறப்படுத்த இருப்பதாக அவர்கள் தெரிவிக்க, சில ஊடகங்களு அதனை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து போட்டுவிட்டார்கள்.


http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4763

Geen opmerkingen:

Een reactie posten