ஒரு இனத்தின் அழிவை அவ் இன சகோதரர்கள் உலகில் எங்கிருந்தாலும் தமது இன அழிவை ஏற்றுக்கொள்ளமாட்டார். இது உலக சரித்திரத்தின் நியதி என ஜனநாயக மக்கள் முன்னணி ஊடகச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி. பாஸ்க்கரா தெரிவித்தார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் தமிழர்கள் தாக்கப்பட்டு அழிக்கப்படுவது பல தசாப்த காலமாக நடைபெற்றுக்கொண்டுவரும்வேளையில் பேச்சு வார்த்தை என்று சொல்லி பல மேசைகளில் ஏமாற்றப்பட்டாலும்,
இலங்கைக்குள் சமாதானத் தீர்வு என தமிழ்ப் பெரும்பான்மையினக் கட்சித் தலைவர் பல சாதக சமிக்ஞைகளையும் காட்டியும் கூட ஓர் தீர்வுத் திட்டத்தை வைக்காமலும் இலங்கை தனது நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமல் உலகையும் ஏமாற்றிய வேளை உலகம் எதிர்மாறான விடையை ஏற்படுத்தினால் அது வியப்புக்குரியதற்றதாக இருக்காது.
இலங்கையில் தமிழர்கள் சிறுபான்மையினராகவிருந்தாலும் கூட உலகில் பரந்து பட்டு எல்லா நாடுகளிலும் தமிழர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இலங்கையில் தமிழரின் துன்பத்தை சக தமிழன் தனது உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் உட்பட்டு இல்லையேல் மேலதிகமாக காட்டத்தான் செய்வான் அதன் விளைவே தமிழக சட்டசபையில் தீர்மானம் அரசியலுக்கு அப்பாற்பட்டு கொச்சியப்படுத்தப்படாமல் சில செய்திகளை நாம் கற்றுக் கொண்டு எமது பிரச்சினைகளை உடனடியாக நாம் பேசித் தீர்க்கா விட்டால்,
இது உலகளாவிய பிரச்சனையாக பர்ணமித்தது மேலும் மேலும் விஸ்வரூபம் எடுத்து தொடர்ந்து இலங்கைப் பிரச்சனை உள்நாட்டுப் பிரச்சனையாக அன்றி உலகளாவிய பிரச்சனையாக மாற்றம் பெற்று இலங்கை மக்கள் ஒரு நாட்டுக்குள் அந்நியொன்னியமாக வாழ்வதற்கான புறச் சூழ்நிலை இல்லாமல் போய்விடும்.
ஏனெனில் யூத் இனத்தவர்களை ஜேர்மன் நாசிப்படைகள் மூர்க்கத்தனமாக அழித்தும் கூட அவர்கள் வெட்ட வெட்டத் தளைக்கும் பீலிக்ஸ் பறவைகள்போல் தம்மைப் பாதுகாத்துக் கொண்டு இன்று உலகிலே மிகச் சிறந்த பலம் பொருந்திய நாடான இஸ்ரேலை அமைத்துக் கொண்டது.
மட்டுமன்றி உலகின் அதிபர் என வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலில் கூட தமது செல்வாக்கைச் செலுத்தும் ஒரு இனமாகக் காணப்படுகின்றது. அதேவேளை தமது இனத்திற்கான சகல தேவைகளையும் ஒற்றுமையாக உணர்வுடன் பேணிக்கொள்வதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
அதேபோல் தான் எமது இனத்தின் அழிவையும் இந்தியத் தமிழர்கள் உணர்வு பூர்வமாகவும் உணர்ச்சியாகவும் சில போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே வேளையில் யாத்திரிகர்கள் தாக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாக காணப்பட்டாலும் கூட அவர்களின் உணர்வுகளையும் எம் தமிழ் மக்களுக்கான போராட்டங்களையும் கருத்திற்கொண்டு எமது நாட்டுப் பிரச்சனையை உடனடியாக சிரமேட் கொண்டு நாமே தீர்க்காதவிடத்து அசாதாரண சூழ்நிலைகள் உலகில் மேலும் மேலும் ஏற்படுவது தவிர்க்கமுடியாதது ஆக மாறிவிடும்.
“படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன்கோவில்”!- இலங்கையில் மதம்பேணப்படுவது இப்படியே…
இலங்கையில் மதவிவகாரங்கள் பேணப்படுவதாகவும் காப்பாற்றப்படுவதாகவும் மேலதிகமாக போப்பாண்டவர் தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதியால் வாழ்த்து தெரிவிக்கப்பட்டு, ஒருமாதம் கடக்கமுன் தேவாலய சொரூபம் மோசமாகத் தாக்கப்பட்டு மனித கழிவுகள் வீசப்பட்டது மதவெறி பிடித்த மனிதத் தன்மையற்றவர்கள் இலங்கையில் இருப்பதை பறைசாற்றிக் காட்டுகிறது என ஜனநாயக மக்கள் முன்னணி ஊடகச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி. பாஸ்க்கரா தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
ஆறுதசாப்த கால அகிம்சை போராட்டம் ஆயுத போராட்டம் முடிவுற்று நான்கு வருடங்கள் முடிவுறும் இவ்வேளையில் உச்ச கட்ட மதவாதம் தலைவிரித்தாடுவதை காணக்கூடியதாக இருக்கின்றது.
போர்க் காலங்களில் பல மதவழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்ட இனவாதப்போர் இன்று உச்ச கட்டமாக விரிவடைந்து மதவாதப் போராக விஸ்வரூபம் அடைந்திருக்கிறது.
இந்துக் கோவில்கள், இஸ்லாமிய பள்ளிவாசல்கள் என்று தொடங்கி போப்பாண்டவர் தெரிவு செய்யப்பட்டு அவரை ஜனாதிபதி வாழ்த்தி ஒருமாதம் நிறைவு பெறமுன் மன்னாரில் கிறிஸ்தவ தேவாலய சொரூபம் தாக்கப்பட்டு மனிதக் கழிவுகள் வீசப்பட்டது.
எவரும் ஏற்றுக் கொள்ள முடியாததும் அருவருக்கத் தக்கதும் மிக மோசமான செயலுமாகும். இதனை எவர் செய்திருப்பினும் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தி மிக கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
ஒரு மதத்தைக் காப்பாற்றுவதற்காக ஒரு இயக்கம் அமைவது அம்மதத்தைப் பாதுகாப்பது அக்கலாச்சாரத்தைப் பாதுகாப்பது உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருநியதிதான். ஆனால் அந்த மதத்தை காப்பாற்றும் செயலானது மத வெறியாகப் பரிணமித்து மற்ற மதங்களை அழித்து மற்ற கலாசாரங்களை அழித்து தமது மதத்தை காப்பாற்ற நினைப்பது மிகப் பாதகமானதும் உலக நியதிக்கு ஒப்பானதும் அல்ல உலக வரலாற்றிலே இப்படியான தவறு இழைத்தவர்கள் அழிந்த வரலாறே உண்டே ஒழிய தழைத்த வரலாறு கிடையாது இதை நாம் புரிந்து கொண்டு இன ஒற்றுமையுடனும் இன மத ஒற்றுமைகளுடன் வாழாதிருப்பின் பாரிய பிறழ்வுகளும் சிக்கல்களும் ஏற்படுவது தவிர்க்க முடியாமல் சென்றுவிடும் என தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten