தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 31 maart 2013

சிறிதரன் எம்.பியை இலக்கு வைத்த தாக்குதல்களுக்கு இலங்கை அரசே முழுப் பொறுப்பு!- அரியநேத்திரன் பா.உ.


சிறிதரன் எம்.பியை இலக்கு வைத்து பலமுறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதற்கு அரசே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகளால் மக்களின் ஆதரவு கூடுமேயொழிய குறையாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனின் கிளிநொச்சி அறிவகம் அலுவலகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவுள்ள நிலையில் இடம்பெற்ற இச்சம்பவமானது தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை ஓரங்கட்டும் நடவடிக்கையாகவும் வாக்காளர்களையும் மற்றும் ஆதரவாளர்களையும் பயமுறுத்தும் செயல்.
சிறிதரன் எம்.பியை இலக்கு வைத்து பலமுறை தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன. இதற்கு அரசே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும் எனவும் இவ்வாறான நடவடிக்கைகளால் மக்களின் ஆதரவு கூடுமே ஒளிய குறையாது' என தெரிவித்தார்.
இவ்வாறான வன்முறைகளை புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் மற்றும் சர்வதேசத்தின் கவனத்திற்கும் கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பொதுமக்களால் பிடிக்கப்பட்டு காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட தாக்குதல் செய்தவர்களை பொலிஸார் விடுதலை செய்து பின்னர் அலுவலகத்திற்கு திரும்பி வரும் காட்சிகள் அடங்கிய புகைப்படம்.....  

Geen opmerkingen:

Een reactie posten