இலங்கைப் பிரச்சினையில் இந்திரா காந்திக்கும் எம்.ஜி.ஆருக்கும் மட்டுமே முழுமையான அக்கறை இருந்தது என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறினார்.
ஊட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
இலங்கைப் பிரச்சனையில் திமுக அதிமுக இரு கட்சிகளுமே தொடர்ந்து நாடகம் ஆடி வருகின்றன. உண்மையிலேயே அந்தக் கட்சிகளுக்கு இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை இல்லை.
மக்களவையில் மத்திய அரசு இலங்கைத் தமிழர் நல்வாழ்வு தொடர்பாகவும், ராஜபக்சவை போர்க்குற்றவாளி என்றும் அறிவிக்க, தீர்மானம் கொண்டுவர வேண்டும்.
இலங்கைப் பிரச்சினையில் இந்திரா காந்திக்கும் எம்.ஜி.ஆருக்கும் மட்டுமே முழுமையான அக்கறை இருந்தது. அவர்கள் இருவரைத் தவிர வேறு யாருக்குமே அக்கறை இல்லை.
அவர்கள் இருவர் மட்டும் இன்னும் சிறிது காலம் இருந்திருந்தால் தமிழீழம் பிறந்திருக்கும். ஆனாலும் பாமக மட்டுமே தடம் மாறாமல் தொடர்ந்து போராடி வருகிறது.
வரும் மக்களவைத் தேர்தலில் இலங்கைத் தமிழர் பிரச்சினையே பிரதான பிரச்சினையாக இருக்கும். அதனால் திராவிட இயக்கங்களோடும், தேசியக் கட்சிகளோடும் பாமக கூட்டணி வைக்காது.
தனித்துப் போட்டியிடும். ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டிய பாமக முயற்சி மேற்கொள்ளும். பாமக பத்து தொகுதிகளில் போட்டியிடும்.
இலங்கைப் பிரச்சினை விவகாரத்தில் மாணவர் போராட்டம் சிறப்பாக உள்ளது. இருந்தாலும் தேர்வு நேரத்தைக் கருத்தில் கொண்டு மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு, தேர்வு எழுத கவனம் செலுத்த வேண்டும். தேர்வு முடிந்தவுடன், விடுமுறையில் போராட்டத்தைத் தொடரலாம் என்றார் .
Geen opmerkingen:
Een reactie posten