தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 27 maart 2013

இலங்கைக்கு எதிராக சென்னையில் 6 இடங்களில் போராட்டம்: மகிந்தவின் கொடும்பாவி எரிப்பு!


இலங்கைக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்துகொண்டே வரும் நிலையில், இன்று சென்னையில் மட்டும் 6 இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
சென்னை கடற்கரைச் சாலையில் அகில இந்திய வானொலி நிலையம் முன்பு தமிழ் ஈழ போராட்ட குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது ராஜபக்சவின் படங்களை எரித்தார்கள்.
சென்னை அண்ணாநகர் 3 அவென்யூவில் உள்ள தொலை தொடர்புத்துறை அலுவலகம் எதிரே வள்ளியம்மை கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
ஜெ.ஜெ. நகர் பாடி தபால் நிலையம் எதிரே மகளிர் சுய உதவிக் குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி ராஜபக்ச பொம்மையை எரித்தார்கள்.
மேலும், வடக்கு கடற்கரைசாலை கலெக்டர் அலுவலகம் எதிரே திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த 40 பேர் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
புதுவண்ணாரப்பேட்டை காலார மருத்துவமனை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ராஜபக்ச கொடும்பாவியையும் சோனியாவின் கொடும்பாவியையும் எரித்தார்கள்.
பல்லாவர்ம சுற்றுச்சாலையில் வேல்டெக் கல்லூரி மாணவர்கள் 375 பேர் சாலை மறியல் செய்தனர்.

http://www.tamilwin.net/show-RUmryDRbNZjp3.html

Geen opmerkingen:

Een reactie posten