தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 29 maart 2013

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களின் தொடர்ச்சி! கொழும்பு புறநகர் பகுதியில் ஆடை வர்த்தக நிலையம் மீது தாக்குதல்


முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்தும் இலங்கையில் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், நேற்று இரவு கொழும்பின் புறநகர் பெப்பிலியான பகுதியில் அமைந்துள்ள “பெசன் பக்” என்ற ஆடையக களஞ்சியம் தாக்கப்பட்டுள்ளது.
பௌத்த பிக்குமாரின் தலைமையிலான 20 பேர் அடங்கிய குழுவினரே தாக்குதலை நடத்தியுள்ளனர். இதன்போது “பெசன் பக்” ஆடையக களஞ்சியத்தின் உடமைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
பல மணித்தியாலங்கள் இந்த தாக்குதல் இடம்பெற்ற போதும் பொலிஸார் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. இதன்பின்னர் இராணுவம் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது.
சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் சிலரும் இதன்போது தாக்கப்பட்டனர். முஸ்லிம் இளைஞனுக்கும் சிங்கள யுவதி ஒருவருக்கும் இடையிலான பிரச்சினையே இதற்கான காரணம் என்று உறுதிப்படு;த்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம்களின் வியாபாரத்தளங்களுக்கு எதிரான போராடடங்களுக்கு ஊடகவியலாளர்களும் ஆதரவு தரவேண்டும் என்றுகோரி பொதுபலசேனா அமைப்பு கோரிக்கை விடுத்திருந்த இரண்டு நாட்களிலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் சிங்கள புதுவருடத்துக்கு சிங்கள மக்கள், முஸ்லிம் கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்யக்கூடாது என்றும அந்த கோரிக்கையில் கேட்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே மஹரகம என்ற இடத்தில் உள்ள “ நோ லிமிட்” என்

Geen opmerkingen:

Een reactie posten