ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட இலங்கை வீரர்களுக்கு தடை!- ஜெயலலிதாவின் அறிவிப்பை பிரசாத் காரியவசம் விமர்சனம்
[ புதன்கிழமை, 27 மார்ச் 2013, 01:33.19 AM GMT ]
விளையாட்டை அரசியலுடன் தொடர்பு படுத்துவதை இலங்கை அரசாங்கம் கண்டித்துள்ளது. இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐ.பி.எல் போட்டித் தொடரில் இருந்து இலங்கை வீரர்களை நீக்குமாறு வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் அனுப்பி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து இலங்கை உயர்ஸ்தானிகர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளை சென்னையில் நடத்த கூடாது என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இதனையும் சுட்டிக்காட்டியுள்ள உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் விடயங்களை ராஜதந்திர ரீதியாக அணுகாமல், அதனோடு விளையாட்டுக்களை இணைப்பது முறையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனால் விளையாட்டுத்துறையில் சாதிக்க நினைப்பவர்களின் வாழ்க்கையே பாதிப்படைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.net/show-RUmryDRbNZkwy.html
இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு எதிர்ப்பு!- ஜெயலலிதாவுக்கு சுப்பிரமணிய சுவாமி மிரட்டல்
[ புதன்கிழமை, 27 மார்ச் 2013, 03:32.16 AM GMT ]
இலங்கையில் தமிழின இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடத்த வேண்டும், தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.
அதில், தமிழர்களின் உணர்வுகளை மதித்து ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்களை விளையாட அனுமதிக்கக் கூடாது என்று பிசிசிஐக்கு அறிவுறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி,
ஜெயலலிதாவின் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு எதிரான இந்தக் கோரிக்கை அரசியல் சாசனத்துக்கு எதிரானது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சிறப்பு ஆயுதப் படையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து போட்டிகளை நடத்தி இலங்கை வீரர்களை அனுமதிக்க வேண்டும்.
அப்படி இல்லை என்றால் சென்னையை பதற்றப் பகுதியாக அறிவித்து ஜெயலலிதாவை ஏற்கச் செய்ய வேண்டும். இதையும் ஏற்க மறுத்தால் அரசியல் சாசனத்தின் 356வது பிரிவை பயன்படுத்தி ஜெயலலிதா அரசை ஜனாதிபதி நீக்கச் செய்யலாம்.
அத்துடன், மத்திய அரசு ஜெயலலிதாவுக்கு 256-ன் கீழ் சில வழிகாட்டு முறைகளை அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
http://www.tamilwin.net/show-RUmryDRbNZkx2.html
Geen opmerkingen:
Een reactie posten