தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 8 maart 2013

பயங்கரவாத் தடுப்பு தொடர்பில் சர்வதேச பிரகடனமொன்று அவசியம்!- இலங்கை


பயங்கரவாத தடுப்பு தொடர்பில் சர்வதேச பிரகடனமொன்று அவசியம் என இலங்கை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கை இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் வியாபித்துள்ள பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த உரிய சர்வதேச பிரகடனமொன்று விரைவில் அமுல்படுத்தப்பட வேண்டும்.
1996ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக சர்வதேச பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான பிரகடனமொன்று உருவாக்கப்பட வேண்டும்.
பயங்கரவாத தடுப்பு சட்டங்களை உருவாக்குவதற்கு இலங்கை எந்த நேரத்திலும் ஒத்துழைப்பு வழங்கும்.
பயங்கரவாதத்திற்கு எதிராக போராடி வாழ்வதற்காக உரிமையை உறுதிப்படுத்த இவ்வாறு சர்வதேச ரீதியான பிரகடனங்கள் அவசியமானது என இலங்கை அறிவித்துள்ளது.

http://www.tamilwin.net/show-RUmryDTcNYjp7.html

Geen opmerkingen:

Een reactie posten