தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 8 maart 2013

அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் செயற்பாட்டால் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம்!- கெஹலிய


அமைச்சர் மகிந்த சமரசிங்கவின் இராஜதந்திர செயற்பாடுகளால் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் தாக்கல் செய்யப்படவுள்ள அமெரிக்காவின் பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு என்னவென்று செய்தியாளாகள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் இந்தியாவின் இந்த நிலைப்பாட்டில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் வைத்து அமைச்சர் மகிந்த சமரசிங்க இலங்கையின் மறுசீரமைப்பு தொடர்பில் வெளியிட்ட கருத்தைத் தொடர்ந்தே இந்தியாவின் நிலைப்பாட்டில் சிறந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
http://www.tamilwin.net/show-RUmryDTcNYjq0.html

Geen opmerkingen:

Een reactie posten