தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 8 maart 2013

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் : குலாம் நபி ஆசாத் உறுதி !


 
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று டெல்லியில் நடைபெற்ற டெசோ கருத்தரங்கில் உறுப்பினர்களிடம் தமிழக காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் குலாம் நபி ஆசாத் உறுதி கூறினார்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற டெசோ கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி, கி.வீரமணி, சுப.வீரபாண்டியன், திருமாவளவன் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழக காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் குலாம் நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், சுதர்சன நாச்சியப்பன், சித்தன் ஆகியோர் பங்கேற்றனர்.
தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே பங்கேற்றார்.
2ம் இணைப்பு
ஜெனீவாவில் அமெரிக்கப் பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்கும் - குலாம் நபி ஆசாத்
ஜெனீவாவில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
நேற்று டெசோ கருத்தரங்கில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர்களுக்காக செயற்பட வேண்டியது இந்தியாவின் தார்மீக பொறுப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten