கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று பிரித்தானிய அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் ஏற்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
த டைம்ஸ் பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
நேற்றைய தினம் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை விடயம் விவாதிக்கப்பட்டதன் பின்னர், பல்வேறு மனித உரிமைகள் அமைப்புக்களால் இந்த அழுத்தங்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே பிரித்தானியாவின் சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பலத்தரப்பும் இந்த மாநாட்டை பிரித்தானியா புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://news.lankasri.com/show-RUmryDRWNZmw1.html
Geen opmerkingen:
Een reactie posten