தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 22 maart 2013

இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடாத்த கால அவகாசம் தேவை: பாலித கொஹணே !


இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடாத்த கால அவகாசம் தேவைப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை நிரந்தரப் பிரதிநிதி டொக்டர் பாலித கொஹணே தெரிவித்துள்ளார்.
அல்ஜசீரா ஊடகத்திற்கு அளித்த விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
அமெரிக்கா உள்ளிட்ட உலகின் ஏனைய நாடுகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை போன்று இலங்கை விவகாரம் விசாரணை நடாத்தவும் போதிய அவகாசம் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முழுமையான விசாரணைகளை நடாத்துதவற்கு கால அவகாசம் தேவைப்படுகின்றது. சில வகை குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சரியான விசாரணை நடத்தாமல் எந்தவிதமான தீர்மானங்களையும் எடுக்க முடியாது.
இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை காணப்படுவதாக இப்போத நிர்ணயம் செய்து விட முடியாது. மனித உரிமை மேம்பாடு மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் பல்வேறு கருமங்கள் ஆற்றப்பட வேண்டியிருப்பதனை ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
யுத்த நிறைவின் பின்னர் அரசாங்கம் பாரியளவிலான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது எனவும், அதனை அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகளும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் டொக்டர் பாலித கொஹணே தெரிவித்துள்ளார்.

http://news.lankasri.com/show-RUmryDRWNZmwz.html

Geen opmerkingen:

Een reactie posten