தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 22 maart 2013

இலங்கை பிரச்சினை: மாணவர்கள் டெல்லியை முற்றுகையிட திட்டம்!!


இலங்கை விவகாரம்! ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு போராடுவோம்! மாணவர்கள் எச்சரிக்கை
இலங்கை விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் பிரதிநிதிகள் வரும் 31ஆம் தேதிக்குள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றும்தமிழீழ விடுதலைக்கான மாணவ கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது. அப்போது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தினேஷ் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:
எங்கள் கோரி்க்கைகள் எதுவுமே சாத்தியம் இல்லாதவை அல்ல. நிறைவேற்ற முடியாதவையும் அல்ல. இன அழிப்பு, போர்க் குற்றம், சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணை ஆகிவற்றை கொண்டுவரும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டிருந்தால், கண்ணிமைக்கும் நேரத்தில் அதனால் இந்தத் தீர்மானங்களைக் கொண்டு வந்திருக்க முடியும்.
மாபெரும் எங்கள் போராட்டத்தை அற்பப் புழுவைப்போல மத்திய அரசு நினைத்துவிட்டது. முள்ளிவாய்க்காலுக்கு முன் பல வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றியதுபோல இப்போதும் ஏமாற்றிவிட்டது. தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது. இந்திய அரசை ஒதுபோதும் மன்னிக்க முடியாது.
எட்டு கோடி தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத மத்திய அரசுக்கு நாங்கள ஏன் மதிப்பளிக்க வேண்டும். உங்களுக்கு இனியும் நாங்கள ஒத்துழைக்கப்போவது இல்லை.
இந்திய விடுதலைப் போரில் வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக ஒத்துழைக்க முடியாது என்று காந்தியடிகள் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தைப்போல, ஒரு தீவிர இயக்கம் தொடங்க வேண்டிய கட்டாயத்தை மத்திய அரசு ஏற்படுத்திவிட்டது.
இனி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய எந்த வரியையும் செலுத்த வேண்டும். எந்தக் கட்டணத்தையும் செலுத்த வேண்டாம். செலுத்தவும் கூடாது என்பதை வலியுறுத்தி மக்களிடம் பிரசாரம் செய்ய இருக்கிறோம். ஊடகங்களும் எங்கள் கோரிக்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும்.
இந்தப் போராட்டம் தொடர் போராட்டமாக முன்னேறும். இதில் மாணவர்களின் ஒற்றுமைதான் மையம். ஈழத் தமிழ் மக்களுக்கு தாயக அதிகாரம் பெற்றுத் தரும் வரையில் மாணவர் போராட்டம் தொடரும்.
மத்திய அரசின் பிரதிநிதிகள் வரும் 31ம் தேதிக்குள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தவறினால் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என்று கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தினேஷ் தெரிவித்தனர்.

http://news.lankasri.com/show-RUmryDRWNZmvz.html

இலங்கை பிரச்சினை: மாணவர்கள் டெல்லியை முற்றுகையிட திட்டம்
[ வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2013, 11:10.27 AM GMT ]
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினார்கள். தமிழகம் முழுவதும் சாலை மறியல், ரெயில் மறியல் போராட்டங்கள், முழக்கங்கள், உண்ணாவிரத அறப்போராட்டம் மூலமும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
கடந்த 10 நாட்களாக இலங்கை தமிழர்களுக்காக மத்திய அரசை கண்டித்து மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் அரசியல் தலைவர்களின் கவனத்தை திசை திருப்பியது.
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மன்றத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது நடந்த ஓட்டெடுப்பில் இந்தியா ஆதரவாக வாக்களித்தாலும் எங்கள் போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் போராட்டக்குழு அறிவித்து உள்ளது.
இலங்கைக்கு எதிராக பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறும் வரை மாணவர்களின் போராட்டம் ஓயாது என்று போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் திவ்யா கூறினார். அவர் மேலும் கூறியதாவது:-
மாணவர்கள் மட்டுமே நடத்திய போராட்டத்தை இனி மக்களிடம் எடுத்து சென்று மக்கள் போராட்டமாக மாற்ற வேண்டும். அப்போதுதான் இது வெற்றி பெறும்.
பஸ்நிலையம், ரெயில் நிலையங்களில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து துண்டு பிரசுரம் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அடுத்தகட்டமாக மாணவர்களை ஒன்றுதிரட்டி டெல்லியை முற்றுகையிட முடிவு செய்துள்ளோம்.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். இலங்கை பிரச்சினைக்காக வாரத்தில் இருநாட்கள் மட்டும் போராட்டமும், தெருமுனை பிரசாரமும் மேற்கொள்ளப்படும். எங்களது அடுத்த கட்ட போராட்டம் குறித்து நாளை இறுதி முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

http://news.lankasri.com/show-RUmryDRWNZmu7.html

Geen opmerkingen:

Een reactie posten