தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 14 maart 2013

ஜெனீவா தீர்மானம் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன: ரணில் கேள்வி!!


இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான விசாரணைகளை நடத்தப்பட வேண்டும்: கனடா வலியுறுத்தல்
ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 22வது அமர்வில் நேற்று இடம்பெற்ற பொது விவாதத்தில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
நேற்றைய விவாதம் இலங்கை குறித்து அமையவில்லை என்றபோதும் ஏனைய நாடுகள் இலங்கை நிலைமைகளை சுட்டிக்காட்டி தமது கருத்துக்களை பதிவு செய்தனர்.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த சுதந்திரமான விசாரணைகளை நடத்தப்பட வேண்டும் என கனடா வலியுறுத்தியுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை, இலங்கை தனது தேசிய செயற்திட்டத்தின் ஊடாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கனடா தெரிவித்துள்ளது.
பொதுநலவாய மாநாட்டை நடத்தவுள்ள இலங்கை, பொதுநலவாய அமைப்பின் கொள்கைகள் மற்றும் அடிப்படைப் பெறுமானங்களின் மீது கொண்டுள்ள அர்ப்பணிப்பை நிரூபிக்க வேண்டும் என கனடா குறிப்பிட்டுள்ளது.
போரின் போது இடம்பெற்ற, மனித உரிமை மற்றும் மனதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து சுதந்திரமான விசாரணைகளை இலங்கை ஆரம்பிக்க வேண்டும் என கனேடிய பிரதிநிதி உரையாற்றுகையில் தெரிவித்தார்.
இந்த விவாதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் உரையாற்றிய அயர்லாந்து பிரதிநிதி, கடந்த ஆண்டில் இலங்கை மிகவும் வரையறுக்கப்பட்ட முன்னேற்றத்தையே காட்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் தற்போதைய மனித உரிமைகள் நிலை, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் நிலை கவலையளிக்கிறது என்றும் பொதுவிவாதத்தில் இது குறித்து கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை வரவேற்பதாகவும் பிரித்தானியப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் சில பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கையால் வகுக்கப்பட்ட தேசிய செயற்திட்டத்தை ஜப்பான் வரவேற்றுள்ளது.
இந்த தேசிய செயற்திட்டத்தில் உள்ளடக்கப்படாத பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளை இலங்கை ஆரம்பிக்க வேண்டும் என்றும் ஜப்பான் வலியுறுத்தியுள்ளது.
இடம்பெயர்ந்தோரை மீளக்குடியமர்த்தும் திட்டத்துக்கு இலங்கை வழங்கியுள்ள ஒத்துழைப்பையும், இந்த விடயத்தில் சர்வதேச சமூகத்துக்கு குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியக குழுவை வரவேற்றதையும் ஜப்பான் வரவேற்றுள்ளது.
வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடத்துவது, உரிய நேரத்தில் பொதுச்சேவை ஆணைக்குழுவை நியமிப்பது உள்ளிட்ட தேசிய செயற்திட்டமத்தை உறுதியாக நடைமுறைப்படுத்துவதில் சவால்கள் இருப்பதாகவும் ஜப்பான் சுட்டிக்காட்டியுள்ளது.
நீதித்துறை மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்து சுவீடன் பிரதிநிதி நேற்றைய விவாதத்தின் போது கவலை வெளியிட்டார்.
இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்து கவலை வெளியிட்ட சுலோவாக்கியா நாட்டுப் பிரதிநிதி, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக தேசிய செயற்திட்டத்தை காத்திரமான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் உள்ள சிறுபான்மை தமிழர்களின் நிலை குறித்து தமது நாடு கவலை கொள்வதாக இந்த விவாதத்தில் பேசிய ஒஸ்ரியப் பிரதிநிதி தெரிவித்தார்.
டென்மார்க் நாட்டின் பிரதிநிதியும், இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்த தமது நாடு கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் தீர்மான வரைபை அனைத்துலக நீதியாளர் ஆணைக்குழுவின் பிரதிநிதி வரவேற்றுள்ளார்.
அண்மையில் இலங்கையின் தலைமை நீதிபதி அரசியலமைப்புக்கு மாறாக பதவி விலக்கப்பட்ட சம்பவம் அந்த நாட்டின் மனித உரிமைகள் நிலை சரிவைச் சந்தித்துள்ளதற்கான அறிகுறியாகும்.
பூகோள கால மீளாய்வின் போதும் இலங்கை பொறுப்ப்புகூறல் பற்றிய பரிந்துரைகளை நிராகரித்து விட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பசுமைத் தாயகம் அமைப்பின் பிரதிநிதி உரையாற்றியபோது, இலங்கையில் 2009இல் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தற்போது, மத்திய அரசின் அதிகாரங்களை அரசியலமைப்புக்கு முரணாக விரிவாக்கவும், சட்டத்தின் ஆட்சியின் வீழ்ச்சிக்கும் வழிவகுத்துள்ளது.
சுதந்திரமான அனைத்துலக ஆணைக்குழு மூலம் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அனைத்துலக கல்வி அபிவிருத்தி நிறுவனம் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது, பெரியளவிலான கொடுமைகள் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டன. இந்தக் கொடுமைகள் நிகழ்த்தப்பட்ட போது அவர்களுக்கு உதவ ஐ.நாவும், அனைத்துலக சமூகமும் தவறிவிட்டன.
இலங்கையில் தமிழ் மக்கள் இன்னமும் மனித உரிமை மீறல்களாலும், இன ஒதுக்கலாலும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு அனைத்துலக சமூகமே பொறுப்பேற்க வேண்டும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://news.lankasri.com/show-RUmryDSYNYgp5.html

ஜெனீவா தீர்மானம் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன: ரணில் கேள்வி
[ வியாழக்கிழமை, 14 மார்ச் 2013, 02:12.11 AM GMT ]
ஜெனீவா தீர்மானம் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெனீவா மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதற்கு எவ்வாற முகம் கொடுப்பது என்பது பற்றி அரசாங்கம் இதுவரையில் அறிவிக்கவில்லை.
சர்வதேச சுயாதீன விசாரணைகளை ஏற்றுக் கொள்வதா அல்லது கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதா என்பதனை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும்.
13ம் திருத்தச் சட்டம், வட மாகாணசபைத் தேர்தல், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரை அமுல்படுத்தல் போன்றன குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்.
புதிதாக அமைக்கப்பட்டு வரும் மத்தள விமான நிலையத்தில் இந்த பேச்சுவார்த்தைகளை நடாத்த விரும்புகின்றேன்.
எதிர்வரும் மாதம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டால், எதிர்வரும் ஜூன் மாதமளவில் வடக்கில் தேர்தல்களை நடாத்த முடியும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரணில் விக்ரமசிங்க ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பிற்கு ஊடகவியலார்கள் சிலருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நியூஸ் பெஸ்ட் மற்றும் சிலோன் டுடே போன்ற செய்தி ஊடகங்களின் ஊடகவியலாளர்களை ரணிலின் பாதுகாவலர்கள், செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் இடத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

http://news.lankasri.com/show-RUmryDSYNYgp1.html

Geen opmerkingen:

Een reactie posten