தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 14 maart 2013

ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடக சுதந்திர மறுப்பு!!


சர்வதேச நாணய நிதியத்தை மறந்தமையால், இலங்கைக்கு அழுத்தம் (செய்தித்துளிகள்)
[ வியாழக்கிழமை, 14 மார்ச் 2013, 01:58.53 AM GMT ]

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படாமையினால் இலங்கை வெளி அழுத்தங்களுக்கு உட்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மூடி” எனப்படும் சர்வதேச நிதி தரநிர்ணய மையம் ஒன்றினால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதன்காரணமாக இலங்கையின் பொருளாதார வளர்ச்சியும் குறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.6 பில்லியன் அமரிக்க டொலர் கடனை வழங்கி இருந்தது.
இது நிறைவடைந்த பின்னர் அரசாங்கம் மீண்டும் கடன் தொகையை கேட்டிருந்தது
மத்திய வங்கிக்கு பதிலாக இறைவரித்திணைக்களத்துக்கு இந்த கடன்தொகையை வழங்குமாறு இலங்கை அரசாங்கம் நாணய நிதியத்தை கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும்; கால அவகாசத்தையும் கருத்தில் கொண்டு நாணய நிதியம் இலங்கைக்கு கடன்வழங்க மறுத்தது
இந்த நிலையில் இலங்கை நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தில் இருந்து விலகி செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் கடன் சுமை அதிகரித்துள்ளது - மூடிஸ்
நாட்டின் கடன் சுமை அதிகரித்துள்ளதாக சர்வதேச மூடிஸ் கடன் வகையீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சி மந்த கதியில் இடம்பெறுமெனக் குறிப்பிட்டுள்ளது.
வரவு செலவுத் திட்ட துண்டு விழும் தொகையை குறைப்பதற்கு அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
எனினும், கடன் சுமை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்கின்றது.
இதனால் பணவீக்கம் தொடர்ந்தும் தளம் நிலையில் காணப்படும் என தெரிவித்துள்ளது.

 http://news.lankasri.com/show-RUmryDSYNYgpy.html

ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடக சுதந்திர மறுப்பு
[ வியாழக்கிழமை, 14 மார்ச் 2013, 01:58.37 AM GMT ]
ஊடக சுதந்திர விடயத்தில் ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளது.
நேற்று ஐக்கிய தேசியகட்சியின் தலைவர் தலைமையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றுக்கு மௌபிம மற்றும் சிரச தொலைக்காட்சி போன்ற சேவைகளின் செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
அவர்களை கட்டிடத்துக்கு முன்னால் இருந்த பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர்.
ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை ஒன்றை விநியோகித்ததாகவும் அதனை பெற்றுக் கொள்ள தவறிய யாருக்கும் கூட்டத்தில் கலந்துக் கொள்ள அனுமதிக்கப் போவதில்லை என்றும் ஐக்கிய தேசிய கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே கட்சியின் வருடாந்த மாநாட்டில் வைத்தும் இந்த சர்ச்சை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://news.lankasri.com/show-RUmryDSYNYgo7.html

Geen opmerkingen:

Een reactie posten