அனைத்துலக பெண்கள் நாள் உலகெங்கும் வாழும் பெண்கள் அனைத்து ஒடுக்குமுறைகளுக்காகவும் குரல் கொடுக்கும் நாள். சமூக, பொருளாதார, பண்பாடு என அனைத்து ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் உலகெங்கும் பெண்கள் போராடுகிறார்கள்.
பெண்களுக்காக பெண்கள் மட்டும் அன்றி ஆண்களும் போராடுகிறார்கள் இன்று உலகப் பெண்கள் போல் வாழும் அருகதை எம் தமிழீழ பெண்களுக்கு இல்லை. யுத்தத்தின் கொடுமைகளால் அவர்கள் சொல்ல முடியாத வேதனைகளை அனுபவித்து வருகிறார்கள்.
இந்த வேளையில் அவர்கள் வலிகளை கூட அவர்களால் வாய் விட்டுச் சொல்ல முடியாது.. அவர்கள் உரிமைகள் ஒட்டு மொத்தமாக மறுக்கப் பட்ட நிலையில் வாழ்வா சாவா என வாழ்வோடு போராடுகிறார்கள்.
அவர்களை இந்த கொடிய நிலையில் வாழ செய்கின்ற தமிழினப் படுகொலை செய்த ஸ்ரீ லங்கா அரசுக்கு எதிராக எம் பெண்களுக்காக எம் மக்களுக்காக போராடுவது ஒவ்வொரு தமிழனதும் கடன். உலகப் தமிழ் பெண்களே எம் பெண்களுக்காக குரல் கொடுக்க விழித்தெழுங்கள்! இன்றில்லையேல் என்றும் இல்லை.
ஆண் பெண் என்ற பேதம் இல்லாமல் அனைத்து தமிழர்களும் எம் இனத்தின் சோகம் தீர்க்க போராட வேண்டிய காலம் இது! எழுந்து வா தமிழா சாதனை படைத்த பெண்மணிகள் மாலதி, அங்கயற்கண்ணி, மேரி கொல்வின் அவர்களுக்கும் வீர வணக்கம்.
Geen opmerkingen:
Een reactie posten