ஐநா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணையை எதிர்கொள்வதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று ஜெனிவா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக சட்டமா அதிபர் பாலித பெர்னாண்டோ தெரிவிக்கின்றார்.
சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் இன்று அதிகாலை ஜெனிவா நோக்கிப் பயணித்ததாக அவர் குறிப்பிட்டார்.
மேலதிக சொலிசிடர் ஜெனரல் சுகத கம்லத் உட்பட பிரதி சொலிசிடர் ஜெனரல்களான ஷவீந்திர பெர்னாண்டோ மற்றும் டீன்ஸ் நவாஸ் ஆகியோர் ஜெனீவா பயணித்த குழுவில் அடங்கியுள்ளனர்.
இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை தொடர்பில் ஜெனிவாவுக்கு இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவுக்கு இந்த குழுவினர் சட்ட உதவிகளை வழங்குவார்கள் என சட்டமா அதிபர் கூறியுள்ளார்.
அதுதவிர கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் அடங்கிய மற்றுமொரு அறிக்கையை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிப்பதற்காக தயாரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஜெனிவா சென்றடைந்துள்ள பிரதி சொலிசிட்டர் ஜெனரல்களான புவனேக அலுவிஹார ஜனக் டி சில்வா மறறும் சிரேஷ்ட சட்டத்தரணி நெரீன் புள்ளே ஆகியோர் இந்த அறிக்கையை தயாரிப்பதற்கான ஆலோசனைகளை வழங்கியிருப்பதாக சட்ட மா அதிபர் பாலித பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
Geen opmerkingen:
Een reactie posten