தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 9 maart 2013

தமிழ்நாட்டில், ஜனாதிபதியை கொலை செய்யும் சதித்திட்டம்?


தமிழ்நாட்டில், ஜனாதிபதி மஹிந்த் ராஜபக்சவை கொலை செய்யும் சதித் திட்டமொன்று குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வைத்து இந்த சதித் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இந்திய அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மதுரை சட்டத்தரணி சங்கத் தலைவர் ரமேஸ் குமார் என்பவரினால் இந்த சதித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியை கொலை செய்வதற்கு ஒரு பில்லியன் ரூபா வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் யாழ்பாண தமிழ் ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்ததாக இராணுவப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
ரமேஸ் குமாரின் சூழ்ச்சித் திட்டம் குறித்து தமிழக பொலிஸார் விசாரணை நடத்தவில்லை.
தமிழகத்திலிருந்து சுற்றுலாப் பயணிகளைப் போன்று வருவோர் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் கண்காணிப்பு செய்து வருகின்றனர்.
தொடர்புபட்ட செய்தி

Geen opmerkingen:

Een reactie posten