சென்னை அண்ணா சாலையில் மறியல் செய்த டெசோ அமைப்பை சேர்ந்த தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், கி.வீரமணி உள்பட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க கோரி டெசோ அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் இன்று வேலை நிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின்,விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவ்ர கி.வீரமணி, சுப.வீரபாண்டியன் உள்பட நூற்றுக்கணக்கானோர் சாலை மறியல் செய்தனர்.
அப்போது, இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர், மேலும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் வேண்டும் என்றும் முழக்கமிட்டனர்.
சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற மறியலை தொடர்ந்து மு.க.ஸ்டாலின், திருமாவளவன், கி.வீரமணி, சுப.வீரபாண்டியன் உள்பட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் வேனில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.
Geen opmerkingen:
Een reactie posten