தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 8 maart 2013

கொலையை விசாரிக்குமாறு பிரித்தானிய எம்.பி இலங்கை சென்றார் !


2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் தங்காலையில் வைத்து பிரித்தானியப் பிரஜை ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இச் செய்தி பலராலும் அறியப்பட்டதே. கொல்லப்பட்ட பிரித்தானியப் பிரஜையுடன் இருந்த ரஷ்யப் பெண்னையும் , சிலர் பாலியல் பலாத்காரம் செய்தார்கள். இக் கொலை தொடர்பாக தங்காலை பிரதேச அதிபர் உட்பட பலர் கைதானார்கள். ஆனால் அனைவரும் அடுத்த வருடமே பிணையில் வெளியே வந்துவிட்டார்கள். இக் கொலையை இலங்கை அரசு வேண்டும் என்றே இழுத்தடிப்புச் செய்வதும் பின்னர் வெளிச்சத்துக்கு வந்தது. இதனையடுத்து கொல்லப்பட்ட நபரின் சகோதரர் பிரித்தானியாவில் தனது தொகுதி எம்.பியைத் தொடர்புகொண்டுள்ளார். அத் தொகுதி எம்.பியான சிமொன் டன்காசு இக் கொலை தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி விசாரணையை துரிதப்படுத்தச் சொல்லியுள்ளார்.

ஆனால் எதுவும் நடந்தபாடாக இல்லை. இதனையடுத்து சிமொன் எம்.பி அவர்கள் கொல்லப்பட்டவரின் சகோதரரோடு சேர்ந்து இலங்கை சென்றுள்ளார். அவர் நேற்றைய தினம் இலங்கையில் உள்ள அமைச்சர் ஒருவரைச் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் அவரைச் சந்திக்க இலங்கை அமைச்சர் மறுத்துவிட்டார். அத்துடன் பிரித்தானியாவில் இருந்து சென்ற பாராளுமன்ற உறுப்பினரான சிமொனை, இலங்கை அரசாங்கம் வேண்டும் என்றே புறக்கணித்து வருகிறது. இதனையடுத்து தாம் கடும் அதிருப்த்தியடைந்துள்ளதாக அவர் இலங்கையில் உள்ள ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

தங்காலை பிரதேச சபைத் தலைவர் மகிந்தருக்கு நெருக்கமானவர் என்றும், அவரே இக் கொலையின் காரண கர்த்தா என்றும் கூறப்படுகிறது. அப்படி என்றால் மகிந்தர் அவரை சிறையில் அடைப்பாரா என்ன ? பிரித்தானிய எம்.பி க்கு தற்போதுதான் விடையம் புரிய ஆரம்பித்திருக்கும்.




http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4661

Geen opmerkingen:

Een reactie posten