தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 8 maart 2013

2 வெள்ளைக்காரர்களை சிங்களக் கவுன்சிலர் போட்டு தாக்கினார் !



கேகாலையில் வைத்து 2 வெள்ளைக்காரர்களை தாக்கியுள்ளார் சிங்களக் கவுன்சிலர் ஒருவர். இலங்கைக்கு சுற்றுலாச் சென்ற வெள்ளைக்கார்கள் இருவரே இவ்வாறு தாக்கப்பட்டவர்கள் ஆவர். சப்ரகமுவ மாவட்ட கவுன்சிலரான சண்டீப் சமரசிங்க என்பவரே இத் தாக்குதலை நடத்தினார்கள் என்று கேகாலை பொலிஸ் நிலையத்தில் குறிப்பிட்ட வெளிநாட்டவர்கள் இருவரும் முறைப்பாடு செய்துள்ளார்கள். பொலிசார் முறைப்பாட்டை ஏற்றுக்கொண்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள். இதேவேளை பொலிசார் விசாரிக்க ஆரம்பித்ததுமே, வைத்தியசாலை சென்று படுத்துவிட்டார் கவுன்சிலர்.

அதாவது அந்த வெள்ளைக்காரர் இருவரும் தம்மை தாக்கியுள்ளது போலவும், தற்போது தாம் படுத்த படுக்கையில் இருப்பதுபோலவும் நாடகம் ஆடுகிறார் குறிப்பிட்ட கவுன்சிலர். இனி எப்போது விசாரணை நடக்கும் ? அது ஆண்டவனுக்கே வெளிச்சம்.


Geen opmerkingen:

Een reactie posten