ஆனால் தென்னாபிரிக்கா ஓசையின்றி செய்யும் பல காரியங்கள் , உலக அரங்கில் வெளியே தெரிவது இல்லை. தென்னாபிரிக்காவில் ஒரு நாளைக்கு 4000 பாலியல் குற்றங்கள் நடைபெறுகிறது. சுமார் 4 மிடங்களுக்கு ஒரு குற்றச்செயல் நடைபெறும் ஒரே நாடு தென்னாபிரிக்கா தான். குறிப்பாக தென்னாபிரிக்கா விடுதலையடைந்த பின்னர் அது இயற்றிய விடுதலை சாசனம் முக்கியமானதொன்று. அதில் தென்னாபிரிக்கா அரசு எவ்வகையான பொருளாதார முறையை கடைப்பிடிக்கவேண்டும் என்று தெள்ளத்தெளிவாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் சமீபத்தில் காணமல் போன சில குறிப்புகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அக் குறிப்புகள் சிலரால் எடுத்துச் செல்லப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதில் தற்போது உள்ள தென்னாபிரிக்க அரசு, வெள்ளை இனத்தவர்கள் ஆட்சி புரியும்போது எக் கொள்கையை கடைப்பிடித்தார்களோ, அகொள்கையையே கடைப்பிடிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இனவெறி அரசின் கொள்கைகளை இன்னமும் நடைமுறைப்படுதுவதாயின், ஏன் விடுதலை வேண்டும் என்று போராடவேண்டும் ?
அதாவது சுருக்கமாகச் சொல்லப்போனால், தென்னாபிரிக்க அரசு தமது சொந்த மக்களையே ஏமாற்றி வருகிறது என்பது தான் உண்மை நிலை. தென்னாபிரிக்க அரசு தனது சொந்த மக்களையே ஏமாற்றிவரும் இன் நிலையில், எவ்வாறு ஈழத் தமிழர் விடையத்தில் தலையிட்டு இதய சுத்தியோடு வேலைசெய்யும், என்று நம்ப முடியும் ? தென்னாபிரிக்க அரசு இவ்வாறு தம்மக்களுக்கே துரோகம் இழைத்துள்ளது. இதேவேளை சில அமைப்புகள் இவர்களுடன் இணைந்து தமிழர்களுக்கு தீர்வுத் திட்டத்தைப் பெற்றுக்கொள்ள முற்பட்டுள்ளார்கள் என்ற செய்தியையும் நாம் படித்திருக்கிறோம். தென்னாபிரிக்க அரசுடன் தொடர்புடைய இவ்வமைப்புக்கள், மிகவும் நிதானமாக தமது காய்களை நகர்த்த இச் செய்தி ஏதுவாக அமையுன் என்ற வகையில், இதனை நாம் பிரசுரித்துள்ளோம் என்பதனை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
Source: The ANC has used the DA's economic policies for its National Development Plan (NDP) for the country, the National Union of Metalworkers of SA (Numsa) said on Thursday. "After a thorough analysis, the [central committee] came to the extremely disturbing conclusion that significant and strategic parts of the NDP were directly lifted from DA policy documents," Numsa general secretary Irvin Jim said in Johannesburg. "The reading of the documents is shocking, and that is what we are going to reveal to the public." Jim was briefing the media on the outcomes of its central committee meeting.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4660
Geen opmerkingen:
Een reactie posten