சினிமா டைரக்டர் அமீர் கடந்த வாரம் வெளியான வாரஇதழ் ஒன்றில் தலிபான் தீவிரவாதிகளோடு விடுதலைப்புலிகளை ஒப்பிட்டு பேட்டி கொடுத்து இருந்தார். இதற்கு இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை தியாகராய நகர் அபிபுல்லா ரோட்டில் உள்ள டைரக்டர் அமீர் வீட்டை இந்து மக்கள் கட்சியினர் சென்னை மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமையில் முற்றுகையிட்டனர்.
தலிபான்களோடு விடுதலைப்புலிகளை ஒப்பிட்டதற்கு கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பினர்.
தேனாம்பேட்டை பொலிஸார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண் உள்பட 21 பேரை கைது செய்தனர்.
அவர்கள் அனைவரும் அருகில் உள்ள சமூகநல கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten