இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும், சர்வதேச விசாரணை கோரியும் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 8ஆம் தேதி தொடங்கிய இந்த காலவரையற்ற உண்ணாவிரதம் 3வது நாளாக இன்றும் நீடிக்கிறது.உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் அவர்களை, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்க கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரிக்காமல், இந்தியா தாமாக முன்வந்து இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானத்தை கொண்டுவரவேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தொடரும் உண்ணாவிரதத்தால் மாணவர்கள் சோர்வுடன் காணப்படுகின்றனர்.
2ம் இணைப்பு
கல்லூரி மாணவர்களுடன் டெசோ உறுப்பினர்கள் சந்திப்பு
ஈழத் தமிழர் பிரச்சனைகளுக்காக மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் லயோலா கல்லூரி மாணவர்களை டெசோ அமைப்பு உறுப்பினர்கள் நேரில் சந்தித்து பேசினர்.
உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள மாணவர்களை திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன், டெசோ உறுப்பினர்கள் தொல்.திருமாவளவன், சுப.வீரபாண்டியன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
போராட்டம் தொடர்பாக திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் கருத்துக்களை அவர்கள் எடுத்துரைத்தனர்.
Geen opmerkingen:
Een reactie posten