சென்னை கோடம்பாக்கத்தில் இன்று இடம்பெற்ற அன்னை உள்ளம் முதியோர் இல்ல கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய போதே மத்திய மந்திரி ஜி.கே.வாசன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களை மறுகுடியமர்த்தல், மறுவாழ்வு பணிக்காக மத்திய அரசு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது.
இலங்கை மனித உரிமை பிரச்சினை சம்பந்தமாக ஏற்கனவே ஐ.நா.சபை கொண்டு வந்த தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்து உள்ளது.
அதே நிலையில் மத்திய அரசு தொடர்ந்து இருக்கும். தமிழர்கள் உணர்வுகளை மத்திய அரசு உணர்ந்து செயல்படுகிறது. தக்க நேரத்தில் சரியான முடிவு எடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் இணைப்பு
இலங்கை சிங்கள இராணுவத்தை சேர்ந்த இரண்டு அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி வழங்கப்படுவது தொடர்பில், இந்திய மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜீ.கே.வாசன் கண்டனம் வெளியிட்டுள்ளார். அவர்களை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தமது கட்சியின் ஏனைய உறுப்பினர்களுடன் இணக்கப்பாடு ஒன்று ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் விரைவில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனியை சந்தித்து இந்த விடயத்தில் அழுத்தம் கொடுக்கவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten