கப்பல்துறை அமைச்சர், ஜி.கே.வாசன் இந்தக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜெனீவாவில் இந்தியா, இலங்கைக்கு எதிராக வாக்களித்தன் மூலம் கொழும்பு அரசாங்கம், தமிழர்களை சிங்களவர்களுக்கு ஈடாக பார்க்க வேண்டிய கட்டாயம் உருவாக்கப்பட்டுள்ளதாக வாசன் கூறியுள்ளார்.
இதேவேளை அமெரிக்க தீர்மானம் முன்னரை விட சிறந்த பணியை செய்திருக்கிறது. எனினும் இந்த தீர்மானம், இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை கோருவதில் தோல்விக்கண்டுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபையின் சிரேஸ்ட நிறைவேற்று அதிகாரி ஜி. அனந்தபத்மநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.
அமெரிக்க தீர்மானத்தின் மூலம் முன்னரை போன்று இலங்கை தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை கவனிக்காமல் இருக்கமுடியாத நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த தீhமானம் எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்களையும் விழித்தெழ வைத்துள்ளதாக அனந்த பத்மநாபன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சர்வதேச விசாரணை ஒன்றை கோருவதில் அமரிக்க தீர்மானம் தோல்விக்கண்டுள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது. அதன் ஜெனீவா பணிப்பாளர் ஜூலி டி ரிவேரோ இந்தக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
http://news.lankasri.com/show-RUmryDRWNZmtz.html
Geen opmerkingen:
Een reactie posten