முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலைச் சம்பவம் தொடர்பில் ஜெனீவாவில் விளக்கமளிக்கப்படவுள்ளது.
பாரதவின் சகோதரிகள் இவ்வாறு ஜெனீவா மனித உரிமைப் பேரவை மாநாட்டில் விளக்கமளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொலை இடம்பெற்ற நாள் முதல் இதுவரையில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
பாரதவின் இரண்டு சகோதரிகளும், உறவினர்களும் ஜெனீவாவிற்கு சென்று விளக்கமளிக்கவுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில், எதிர்வரும் 14ம் திகதி பாரத கொலை தொடர்பில் விளக்கமளிக்க பாரத குடும்பத்தினருக்கு 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பாரத கொலை தொடர்பிலான வழக்கு இலங்கை நீதிமன்றில் விசாரணை செய்யப்படும் விதம் குறித்தும் விளக்கமளிக்கப்படவுள்ளது.
பாரதவின் மகள் ஹிருனிகாவின் பாதுகாப்பு நிலைமை குறித்தும் திருப்தி அடைய முடியாதென பாரதவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten