தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 8 maart 2013

த.தே.கூட்டமைப்பினர் போர்க்குற்றச் செயல்களுக்கு வழங்கிய பங்களிப்பு குறித்து விசாரணை?


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாட்டில் இடம்பெற்ற போர்க் குற்றச் செயல்களுக்கு வழங்கிய பங்களிப்பு குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றச் செயல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் பங்கிருப்பதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான தகவல்கள் என்னிடம் உள்ளது என பிரதி அமைச்சர் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.
புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் தலைமையில் கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு போர்க் குற்றச் செயல்கள் தொடர்பிலான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், புலிகளின் தலைவர் தீபனின் மிக நெருங்கிய உறவினர் என அவர் கருணா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெனீவா சென்று இலங்கைக்கு எதிராக போர்க் குற்ற விசாரணை நடத்துமாறு கோரியுள்ளதாக குறித்த சிங்கள ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten