இதில் தமாஷ் என்னவென்றால், ஐ.நா. அமைதிப்படையினர் அங்கு இருப்பது, போராளிப் படையினரின் நடவடிக்கைகளை கண்காணிக்க அல்ல. போலன் ஹைட்ஸ் பகுதியில், சிரியா, இஸ்ரேலிய ராணுவங்களுக்கு இடையிலான சமாதான ஒப்பந்தத்தை கண்காணிக்கவே ஐ.நா. அமைதிப்படை அங்கே உள்ளது. UNDOF என்று அழைக்கப்படும் இந்த அமைதிப் படையினரின் முகாமை ஆயுதங்களுடன் முற்றுகையிட்ட சுமார் 30 போராளிப் படையினர், 20 அமைதிப்படை வீரர்களை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர்.
சிரியா போராளிப் படையினருக்கு மேலை நாடுகள், எல்லை வழியாக ‘ரகசியமாக’ ஆயுத சப்ளை செய்து யுத்தத்துக்கு உதவும் நிலையில், தமது தலையில் தாமே மண் அள்ளி போட்டுக் கொண்டுள்ளனர், சிரியா போராளிப் படையினர். (அவர்களில் சுமார் 7 குழுக்கள் உள்ளன. இது எந்தக் குழுவின் வேலை என்று தெரியவில்லை)
இதன் ரியாக்க்ஷன், அடுத்த ஓரிரு நாட்களுக்குள் தெரியும்.
Geen opmerkingen:
Een reactie posten