தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 10 maart 2013

இலங்கைக்கு எதிரான யோசனை நகல் தொடர்பில் ஆராய இலங்கை அரசாங்கம் குழுவொன்று நியமனம் !


இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஜெனீவாவில் முன்வைக்கவுள்ள யோசனை தொடர்பில், ஆராய்வதற்காக இலங்கை அரசாங்கம் குழு ஒன்றை நியமிக்கவுள்ளது.
இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம இதனை அறிவித்துள்ளார்.
அமெரிக்கா, இலங்கைக்கு எதிராக முன்வைக்கவுள்ள யோசனை தொடர்பில் இரண்டாவது நகல் அறிக்கை ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்தநிலையில் அதனை ஆராய்ந்து அது தொடர்பில் குறித்த குழு இலங்கை அரசாங்கத்துக்கு அறிவிக்கும்.
இதனையடுத்தே இலங்கை அரசாங்கம் தமது உரிய பதிலை வழங்கும் என்று கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் இரண்டாவது நகல் அறிக்கையின்படி இலங்கையின் நல்லிணக்கத்தை மேம்படுத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் பிரேரித்துள்ள தொழில்நுட்ப குழுவின் உதவித்திட்டம் வரவேற்கப்பட்டுள்ளது.
அத்துடன் கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி நாட்டுக்குள் நீதித்துறையின் செயற்பாட்டை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அமெரிக்கா இரண்டாம் நகல் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் காணாமல் போனோர் மற்றும் சித்திரவதைகள் உட்பட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கு வருகை தரும் ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர்கள் மற்றும் ஏனைய நிபுணர்களின் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அமெரிக்கா நகலில் கோரப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten