தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 10 maart 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்ய முயற்சி?


ஐ.நாவில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய யோசனைகள் முன்வைக்கப்பட உள்ளன!
ஜெனீவா மனித உரிமைப் பேரவை மாநாட்டில், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய யோசனைகள் முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 15ம் திகதி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
இதில், வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுதல், மரண தண்டனையை இல்லாதொழித்தல், தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்தல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அரச சார்பற்ற நிறுவனங்களும் சில நாடுகளும் கூட்டாக இணைந்து திட்டமிட்ட அடிப்படையில் நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படக் கூடிய யோசனைகளை முன்வைக்க உள்ளன.
சில நாடுகளும். அரச சார்பற்ற நிறுவனங்களும் நாட்டை பிளவுபடுத்த சில ஆண்டுகளாகவே முயற்சித்து வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படக் கூடிய எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் எடுக்காது என தெரிவிக்கப்படுகிறது.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்ய முயற்சி?
[ ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 12:50.38 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்ய முயற்சிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேசத் துரோக செயற்பாடுகளில் ஈடுபடுவோரை கைது செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட உள்ள தீர்மானத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் ஜெனீவா சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தரப்பினர் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பங்கம் நேரும் வகையில் பகிரங்கமாக கருத்துக்களை வெளியிட்டிருந்தால் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்படுகிறது.
அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக இரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டுக்கு எதிராக செயற்பட்டு நாடு திரும்புவோரை விமான நிலையத்திலேயே வைத்து கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அரசியல் அமைப்பின் ஆறாம் சரத்தின் அடிப்படையில் நாட்டுக்கு எதிராக செயற்படுவோரை கைது செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்குள் வேறும் ஓர் இராச்சியத்தை உருவாக்குதல் தொடர்பில் கருத்து வெளியிடல், அதற்கான பணம் செலுத்துதல், ஒத்துழைப்பு வழங்குதல் போன்ற அனைத்து விடயங்களுமே சட்டத்திற்கு விரோதமானது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவர் நாடாளுமன்ற உறுப்பினராயின், நாடாளுமன்ற உறுப்புரிமை ஏழு ஆண்டுகளுக்கு இடைநிறுத்த முடியும்.
இதேவேளை, வேறு நாடொன்றிற்கு சென்று தங்களுக்கு விரும்பியதை தெரிவிக்கும் உரிமை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனிப்பட்ட நபர்களுக்கும் காணப்படுவதாக சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும், நாட்டின் பௌதீக ஒருமைப்பாட்டுக்கு பங்கம் ஏற்படும் கருத்துக்களை வெளியிட உரிமை கிடையாது.
ஜெனீவாவில் ஆற்றப்படும் உரைகள் மற்றும் வெளியிடப்பட்டு வரும் கருத்துக்கள் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினர் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten