தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிpவத்துள்ளார்.
ஜெனிவாவில் வெளியாகும் ஊடகச் செய்திகளின் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பான அமெரிக்கத் தீர்மானத்தின் வாசகங்கள் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை.
இந்த முறை கொண்டு வரப்படவுள்ள தீர்மானம், கடந்த முறை கொண்டுவரப்பட்டதை விட சற்று கடுமையாக இருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.
போர்க் குற்றம் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை தேவை தாம் கோருவதாக சுரேஷ் பிரேமசந்திரன் குறிப்பிட்டார். இறுக்கமான ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்த அவர், எனினும் அமெரிக்காவை மாத்திரமே தாம் நம்பியிருக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்து தங்கள் நிலைப்பாட்டை எடுத்துக் கூறவுள்ளதாகவும் சுரேஷ் பிரேமசந்திரன் கூறியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten