அவ்விவாதத்தில் உரையாற்றிய திமுக நாடாளுமன்ற குழுவின் தலைவர் டி.ஆர். பாலு, தமிழ் ஈழத்திற்காக திமுக தொடர்ந்து போராடும் என தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் குறிப்பிடுகையில்,
இலங்கைத் தமிழர்களுக்காக இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை விவகாரத்தில் இந்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவாக விளக்க வேண்டும்.
அத்துடன், இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சவிற்கு இந்தியா சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது எப்படி என்று வினவினார்.
மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இலங்கையில் தமிழர்களுக்கு சமஉரிமை வழங்கப்பட வேண்டும் என்பதையே திமுக வலியுறுத்துகிறது என்றார்.
இலங்கையில் தொடர்ந்து மனித உரிமைகள் மீறப்பட்டு வருகின்றன என்றும் இலங்கையில் இராணுவ முகாம்களில் பாலியல் சித்திரவதைகள் நடந்துள்ளதாகவும், பெண்களும், குழந்தைகளும் கொடூரமாக கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதுவரை, இலங்கையில் 1,20,000 அதிகமான தமிழர்கள் இடம் பெயர்ந்துள்ளனர். தமிழர்கள் அங்கு தொடர்ந்து இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருவதாக கூறினார்.
இது தவிர இலங்கையில் இந்துக் கோயில்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும், அங்குள்ள கிராமங்களின் தமிழ்ப் பெயர்கள் மாற்றப்பட்டு சிங்கள பெயர்கள் சூட்டப்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்கள் தொடர்ந்து குறிவைத்து அழிக்கப்பட்டு வருவதாகவும் இலங்கையில் திட்டமிட்டு இனப்படுகொலை நடந்தது என்றும் அங்கு ஹிட்லர் ஆட்சி நடப்பதாகவும் பாலு தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten