அமெரிக்காவினால் தாக்கல் செய்யப்படவுள்ள பிரேரணையின் உட்கிடக்கைகளை பொறுத்தே, அதற்கு ஆதரவாக வாக்களிப்பதா? இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்று இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
நேற்று பிரதமர் அலுவலகத்தில் வைத்து அவர் இதனைத் தெரிவித்ததாக என்டீ.டி.வீ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்ற நிலையில், மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தி.மு.கவின் அழுத்தமும் அதிகரித்துள்ளது.
இது தொடர்பில் மத்திய அரசாங்கத்தக்கும் - தி.மு.கவுக்கும் இடையில் முறுகல் நிலையும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய மத்திய அரசாங்கம், இது குறித்த தமது இறுதி முடிவை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக என்டீடிவி தெரிவித்துள்ளது.
இரண்டாம் இணைப்பு-
இலங்கைக்கு எதிராக மனிதவுரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவரும் பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்குமா இல்லையா என்பது குறித்து சட்ட சரத்திற்கு அமையவே தீர்மானிக்கப்படும் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
குறித்த பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு தமிழ்நாட்டில் தமது ஆதரவு கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் வலியுறுத்தி வருவதாக பிரதமர் குறி;ப்பிட்டார்.
இலங்கையில் இடம்பெற்ற போரின் போது சர்வதேச சட்டதிட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக தி.மு.கவினர் குற்றம்சுமத்துகின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயதான புதல்வர் பாலசந்திரன் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக சனல்4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப் படம் காரணமாகவும் இந்த எதிர்ப்பு வலுவடைந்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தமிழ் நாட்டின் அரசியல் கட்சிகளின் பிரதான போராட்ட தொனிப்பொருளாகவும் இந்த விடயம் அமைந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் ஆணையகத்தின் கடந்த வருட அமர்வின் போது இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு இந்தியா தமது ஆதரவை வெளியிட்டிருந்தது. எனினும், இந்தமுறை பிரேரணைக்கு இந்தியா வாக்களிப்பது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கவில்லை.
http://news.lankasri.com/show-RUmryDTbNYkv5.html
|
Geen opmerkingen:
Een reactie posten